Revolution in school education, AI subjects introduce across the country from grade 3 onwards AI in Education
இந்தியா

3ம் வகுப்பு முதல் AI பாடம் மத்திய அரசு அதிரடி : 2026ல் அறிமுகம்

AI Classes From Grade 3 in India : பள்ளிக் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 3ம் வகுப்பு முதல் AI பாடம் அறிமுகம் செய்யப்படுகிறது.

Kannan

வளர்ச்சி பெற்று வரும் மனிதகுலம்

AI Classes From Grade 3 in India : கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்பே உருவான மனித இனம் பல யுகங்களை அதாவது ஆயிரக் கணக்கான ஆண்டுகளை கடந்து வந்து இருக்கிறது. காலத்திற்கு ஏற்ப நடைபெறும் மாற்றங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மனிதர்கள் வளர்ச்சி பெற்று வருகிறார்கள்

AI தொழில்நுட்பம்

கம்ப்யூட்டர் காலம், இன்டர்நெட் காலம், சோசியல் மீடியா காலம் என்ற டிரெண்ட் இப்போது செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial Intelligence அதாவது AI தொழில்நுட்பத்தில் வந்து நிற்கிறது. இது மனித குலத்திற்கு பெரும் சவால் தான் என்றாலும்,

மாணவர்களுக்கு வரப்பிரசாதம்

பிரபலமாகி வரும் AI தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கி விட்டது. இந்த தொழில் நுட்பத்தை ஆரம்ப கல்வியில் முதலே கொண்டு வருவது எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மகிழ்ச்சி கடலில் பெற்றோர்கள்

அந்தவகையில் பள்ளிக்குழந்தைகள் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே Artificial Intelligence கற்றுக்கொள்ள போகிறார்கள் என்ற செய்திபெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

3ம் வகுப்பு முதல் ஏஐ பாடத்திட்டம்

இதற்கு காரணம் மத்திய அரசு. இந்தத் திட்டம் பற்றி மத்திய கல்வித்துறை வெளியிட்ட தகவலின்படி, 2026–27 கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு AI பற்றிய பாடத்திட்டம் கட்டாயமாக சேர்க்கப்படுகிறது.

ஏஐ பாடம் - NCERT உருவாக்குகிறது

இதற்கான பாடத்திட்டம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பேரவை (NCERT) மூலம் உருவாக்கப்படுகிறது.மாணவர்களின் வயது மற்றும் கற்றல் நிலைக்கு ஏற்ப அடிப்படை தரத்தில் AI என்றால் என்ன?, ரோபோட்கள் எப்படி இயங்குகின்றன?, மெஷின் லெர்னிங் என்றால் என்ன? போன்ற எளிமையான விளக்கங்களுடன் தொடங்கி, மேல் தரங்களில் டேட்டா அனலிசிஸ், கோடிங், AI எதிக்கல் யூஸ் போன்ற ஆழமான கருத்துக்களும் சேர்க்கப்படும்.

குழந்தைகளின் திறன் அதிகரிக்கும்

குழந்தைகள் சிறு வயதிலிருந்தே சிந்திக்கும் திறன், பிரச்சினைகளை தீர்க்கும் திறன், மற்றும் டிஜிட்டல் திறமை வளர்க்கும் நோக்கத்துடன் பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது.

ஏஐ கல்விக்கான திட்ட வடிவமைப்பு

* 3–5 ஆம் வகுப்பு வரை – AI அடிப்படை விளக்கங்கள், விளையாட்டுத் திறன் பயிற்சிகள்

* 6–8 ஆம் வகுப்பு வரை – சிறு ரோபோட்கள், Coding blocks, logical games. பாடங்கள்

* 9–12 ஆம் வகுப்பு வரை – Machine Learning, Data Science, AI Ethics, Real-world Projects

* இதற்காக AI Labs, Digital Classrooms, Teacher Training Programmes ஆகியவை நாடு முழுவதும் அமைக்கப்படும்.

* AI அடிப்படையிலான தொழில்கள் உருவாகும் போது, இந்தியாவே முக்கிய மையமாக மாறும்

சென்னை ஐஐடி நிபுணர் குழு

இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, ஐ.ஐ.டி மெட்ராஸைச் சேர்ந்த பேராசிரியர் கார்த்திக் ராமன் தலைமையில் சி.பி.எஸ்.இ ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இக்குழு AI மற்றும் CT பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

============