ஏர் இந்தியா விமான சேவை
Air India Unveils New Global Food Menu For International And Domestic Flights : இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியா போக்குவரத்து நிறுவனம், விமானப் பயணிகளை கவர புதிய மெனுவை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த மெனுவில் வட இந்திய ,தென்னிந்திய மற்றும் சிறப்பு வாய்ந்த ஆசிய, ஐரோப்பிய உணவு வகைகளும் இடம்பெற்றுள்ளன.
புதிய மெனு அறிமுகம்
இந்த மெனு, இந்தியாவின் பல்வேறு சமையல் கலாச்சாரங்கள், அவத் அரச உணவுகள் ,தென்னிந்தியாவின் கடலோர உணவுகள் ஆகியவற்றின் தாக்கங்களை கொண்டதாகவும் , சர்வதேச தரத்திலும் , உள்ளூர் சுவையிலும் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய வழித்தடங்களில் அறிமுகம்
புதிய மெனு, டெல்லியிலிருந்து லண்டன், நியூயார்க், மெல்போர்ன், சிட்னி, டொராண்டோ , துபாய் ஆகிய நகரங்களுக்கு(Air India Food Menu for International Flights) செல்லும் விமானங்களிலும், மும்பை மற்றும் பெங்களூருவிலிருந்து சான் பிரான்சிஸ்கோ ,நியூயார்க் சில முக்கிய சர்வதேச வழித்தடத்தில் செல்லும் விமானங்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
உள்நாட்டு போக்குவரத்திலும் பின்னர் விரிவாக்கம்
பின்னர் படிப்படியாக அனைத்து சர்வதேச ஏர் இந்தியா விமானங்களிலும், பின்னர் அவர்களின் உள்நாட்டு விமானப் போக்குவரத்திலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
பயணிகளுக்கான மெனு
முதல் வகுப்பு பயணிகளின் உணவில் சிறப்பு வாய்ந்த இனிப்புகள், உயர்தர உணவு வகைகள், ரொட்டிகள் மற்றும் விருப்பத்தின் பெயரில் ஒயின் மற்றும் ஷாம்பெயின் போன்றவை பரிமாறப்படும்.
வணிக வகுப்பில் விருப்பத்தின் பெயரில் சர்வதேச மற்றும் இந்திய உணவு வகைகள் வழங்கப்படுகிறது. மேலும் பிரீமியம் எகானமி மற்றும் எகானமி வகுப்பு பயணிகளுக்கு வட இந்திய உணவுகள், தென்னிந்திய உணவு வகைகள் மற்றும் சர்வதேச உணவு வகைகளை வழங்குகிறது.
முதல் வகுப்பு பயணிகளுக்காக
ஜப்பானிய டெப்பன்யாகி கிண்ணம், சிட்ரஸ் டைகர் இறால்கள், ஓரியண்டல் நாபா முட்டைக்கோஸ் மற்றும் டோஃபு ரோல்மாப்கள் ஆகியவை உணவு வகைகளில் இடம்பெற்றுள்ளன.
வணிக வகுப்பு பயணிகளுக்காக சியோல் சுடர் இறால்கள், மணிகோட்டி ஃபாரெஸ்டியர் மற்றும் மத்திய தரைக்கடல் தபாஸ் ஆகியவை உணவில் இடம்பெற்றுள்ளன.
மேலும் வணிக வகுப்பில் வீட்டு முறை மசாலா பருப்பு கிச்சடி மற்றும் ஸ்டஃப்டு பராத்தா ஆகியவையும் விருப்பத்தில் வழங்கப்படும்.
இளைய தலைமுறையை கவர சிக்கன் பிம்பாப் மற்றும் மேட்சா டெலிஸ் ஆகியவையும் மெனுவில் இடம்பெற்றுள்ளன
இந்தியாவின் உணவு வகைகள் :
முதல் மற்றும் வணிக வகுப்பு பயணிகளுக்கு(Air India Food Menu List in Tamil) அவதி பனீர் அஞ்சீர் பசண்டா எல்லாம் கொண்ட வெஜ் ஆவாதி தாலி , அசைவமற்ற அவதி தாலி, (மிளகாய் பொடி இட்லி, உப்மா, மினி மைசூர் மசாலா தோசை மற்றும் சாம்பார் உள்ளிட்டவை) தென்னிந்திய தாலி மற்றும் ராஜஸ்தானி பெசன் சில்லா, மலபாரி சிக்கன் கறி மற்றும் மலாய் பலக் கோஃப்தா ஆகியவை இடம்பெறுகின்றன.
சைவ உணவு விரும்பிகளுக்கு :
சிறப்பு வகை சைவ உணவுகள் விருப்பத்தின்படி வழங்கப்படுகிறது. இந்த புதிய உணவு வகைகளை , புகழ் பெற்ற சமையல் கலைஞர் சந்தீப் கல்ரா மேற்பார்வையில் மெனுக்கள் உருவாக்கியுள்ளார்.
இளம் பயணிகளுக்காக கொரிய பிம்பாப் மற்றும் மேட்சா டெலிஸ் போன்ற சர்வதேச உணவு வகைககள் மற்றும் டெல்லியின் பாரம்பரியமிக்க தெரு உணவு வகைகள் , தென்னிந்தியாவின் ருசியான சிற்றுண்டிகள் என ஏர் இந்தியாவின் மெனுவிற்கு மெருகேற்றி, பயணிகளின் நாவை ருசி பார்க்க போகின்றன.
==========