passport fees to rise after 14 years; effective from July 1, Central Government announces.  source : ai generated
இந்தியா

14 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் பாஸ்போர்ட் கட்டணம் : ஜூலை 1 முதல் அமல், மத்திய அரசு அறிவிப்பு..!

இந்தியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்போர்ட் மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கான கட்டணங்களை மத்திய அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது.

Rohini

14 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் பாஸ்போர்ட் கட்டணம்

இந்தியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்போர்ட் மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கான கட்டணங்களை மத்திய அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது.

ஜூலை 1 முதல் அமல்

திருத்தம் செய்யப்பட்ட இந்த புதிய விமான பாஸ்போர்ட் புதிய கட்டண விகிதங்கள் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாஸ்போர்ட் என்பது முதன்மையாக ஒரு பயண ஆவணம் மட்டுமே தவிர, அது இந்தியக் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்று சமீபத்தில் மத்திய அரசு தெளிவுபடுத்திய மறுநாளே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அர்சு

திருத்தப்பட்ட விமான பாஸ்போர்ட் கட்டண விவரங்கள்

36 பக்க சாதாரண பாஸ்போர்ட்: 

அதன்படி 36 பக்க சாதரண பாஸ்போர்ட் , அதாவது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான 36 பக்க புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தலுக்கான கட்டணம் தற்போதைய ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதே பிரிவில் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

60 பக்க பாஸ்போர்ட்: கூடுதல் பக்கங்கள் கொண்ட 60 பக்க பாஸ்போர்ட்டுக்கான சாதாரண கட்டணம் ரூ.2,000-லிருந்து ரூ.3,500 ஆகவும், தட்கல் கட்டணம் ரூ.4,000-லிருந்து ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மைனர்களுக்கான கட்டணம்: 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான 36 பக்க பாஸ்போர்ட் கட்டணம் சாதாரண முறையில் ரூ.1,750 ஆகவும், தட்கல் முறையில் ரூ.4,250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொலைந்துபோன பாஸ்போர்டை பெற கூடுதல் கட்டணம்

இந்த அறிவிப்பின் படி தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்கு மாற்றாகப் புதிய பாஸ்போர்ட் பெற இனி பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி புதிய பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் புதிய மாற்றப்பட்ட கட்டண அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

=======================