airfares skyrocketing, central government issued an order setting an upper limit on flight ticket booking SpiceJet
இந்தியா

விமான கட்டணங்கள் அதிரடியாக உயர்வு : உச்சவரம்பு நிர்ணயம்

Central Government Sets Upper Limit in Flight Ticket Booking : விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்த நிலையில், அதற்கு உச்ச வரம்பை நிர்ணயித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

Kannan

இண்டிகோ விமான சேவை ரத்து

Central Government Sets Upper Limit in Flight Ticket Booking : இண்டிகோ விமான நிறுவனம், விமான சேவை தொடர்ந்து ரத்து செய்து வருவதால், பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் இந்த நிறுவனம், சுமார் 1600 விமானங்களை ரத்து செய்து இருக்கிறது. இன்று மட்டும் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.

ஜெட் வேகத்தில் விமான கட்டணம்

இதன் காரணமாக மற்ற நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்க கடும் போட்டி எழுந்துள்ளது. எனவே, கட்டணங்கள் இதுவரை இல்லாத அளவு உயர்த்தப்பட்டு இருக்கின்றன. சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல 71,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது.

பயணிகள் கடும் அவதி

கருத்தரங்குகள், முக்கிய நிகழ்ச்சிகள், சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க இயலாதவர்கள், வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் கொடுத்து விமானங்களில் பயணிக்கின்றனர்.

விமானக் கட்டணம் - கடும் விமர்சனம்

சராசரியாக ரூ. 10,000 - ரூ. 20,000 வரை இருக்கும் விமான டிக்கெட் கட்டணங்கள் ரூ.1 லட்சத்தை தொட்டு அதிர்ச்சி அளிக்கின்றன. இதன் காரணமாக விமானங்களை நாடுபவர்களுக்கும் சிக்கல் உருவானதோடு, கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

விமான கட்டணத்திற்கு உச்சவரம்பு

இதனை கருத்தில் கொண்டு விமான கட்டணங்களை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்து இருக்கிறது. அதன் ஒருபகுதியாக விமான டிக்கெட் கட்டணத்திற்கு உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

* இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மற்ற நிறுவனங்கள் விமான டிக்கெட் கட்டணங்களை வழக்கத்தை விட அதிகமான அளவில் உயர்த்தியிருக்கின்றன

* சந்தர்ப்பவாத விலையேற்றத்தில் இருந்து பயணிகளைக் காக்கும் வகையில், விமான டிக்கெட் கட்டணங்களின் உச்ச வரம்பு நிர்ணயம்

* நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண வரம்புகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்

* நிலைமை முழுமையாக சீராகும் வரை, இந்த வரம்புகள் அமலில் இருக்கும்.

* விமான நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் பயண தளங்களுடன் தீவிர ஒருங்கிணைப்பு மூலம் கட்டண நிலைகளை அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்கும்.

* விதிமுறைகளிலிருந்து விலகினால் பொது நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* நிலுவையில் உள்ள பயணிகளுக்கான பணத்தைத் திரும்பப் பெறும் தொகையையும் தாமதமின்றி வழங்குமாறு இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவு

* ரத்து செய்யப்பட்ட அல்லது தடைபட்ட அனைத்து விமானங்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையை டிசம்பர் 7 இரவு 8 மணிக்குள் முடிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

====

.