All Gujarat Ministers Resignation for Cabinet Expansion Reshuffle 2025 To Swearing-in Ceremony Tomorrow Oct 17 News in Tamil 
இந்தியா

குஜராத்தில் 16 அமைச்சர்களும் ராஜினாமா! நாளை பதவியேற்பு விழா!

All Gujarat Ministers Resignation for Cabinet Expansion Reshuffle : குஜாராத்தில் கூண்டோடு ராஜினாமா செய்த 16 அமைச்சர்கள். புதிய அமைச்சரவை எப்படி இருக்கும் என சமூக ஆர்வலர்கள் ஆர்வம்.

Bala Murugan

ராஜினாமா செய்த அமைச்சர்கள் :

All Gujarat Ministers Resignation for Cabinet Expansion Reshuffle : குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் பூபேந்திர படேல் மந்திரி சபையில் உள்ள அமைச்சர்கள் 16 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். புதிய அமைச்சர்கள் பதவியேற்க ஏதுவாக தற்போது பதவியில் இருந்த 16 அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்படும்

இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பை சேர்ந்தவர்களுக்கும் புதிய மந்திரி சபையில் வாய்ப்பளிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ள எம்.எல்.ஏக்களின் பட்டியலோடு இன்று இரவு கவர்னர் ஆச்சார்ய தேவ்விரத்திடம் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் சந்திக்க உள்ளார். நாளை காலை 11.30 மணிக்கு காந்தி நகரில் பதவியேற்பு நடைபெற உள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் உள்துறை மந்திரி அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமூக வலைதள விமர்சனங்களில் நெட்டிசன்கள்

16 அமைச்சர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் பூபேந்திர படேலிடம் வழங்கி தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர், இதைத்தொடர்ந்து மறுநாள் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா 17 ஆம் தேதி காந்தி நகரில் நடைபெற உள்ளது. ஒரே நேரத்தில் முதலமைச்சராகிய பூபேந்திர படேலை தவிர்த்து அமைச்சர்களின் அனைவரின் ராஜினாமா குறித்தும் நெட்டிசன்கள் பலரும் ராஜினாமா வீடியோவை ஷேர் செய்து வரும் நிலையில், புதிய அமைச்சரவை எப்படி இருக்கும் என தங்களது கமென்டஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.