Amar Prasad Reddy has quit the BJP; Annamalai did not receive due recognition within the Tamil Nadu BJP.  google
இந்தியா

”பாஜகவில் இருந்து விலகினார் அமர்பிரசாத் ரெட்டி” : அண்ணாமலைக்கு உரிய அங்கீகாரம் இல்லை எனக் குற்றச்சாட்டு...!

பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு தலைவராக இருந்த அமர் பிரசாத் ரெட்டி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Rohini

பாஜகவில் இருந்து விலகும் தலைவர்கள்

சமீபத்தில் தமிழகத்தில் பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி 'இது நம்ம இயக்கம்' என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளார் , இந்த நிலையில் தொடர்ந்து பாஜகவில் இருந்து பலரும் விலகி வருகின்றனர்.

பாஜகாவில் இருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி

அந்தவகையில், பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு தலைவராக இருந்த வந்த அமர் பிரசாத் ரெட்டி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அண்ணாமலையின் கட்சியில் இணைகிறாரா

பாஜகாவில் இருந்து விலகியிருக்கும் அமர் பிரசாத் ரெட்டி , அண்ணாமலை ஆரம்பித்துள்ள இது நம்ம இயக்கத்தில் சேர போவதகவும் தகவல் வெளியாகி உள்ளது

பாஜகா 4-5 பேரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது , அமர் ரெட்டி

கட்சியிலிருந்து விலகிய அமர் பிரசாத் ரெட்டி கூறிவதாவது தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் திமுக இருக்கிறது என்றால், தமிழக பாஜக, 4 -5 பேரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் தோல்வியடைந்தாலும் அவர்களேதான் மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். என்று தெரிவித்துள்ளார்

அண்ணாமலைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை

கட்சியில் இருந்து விலகிய பின்பு பேசிய அமர் பிரசாத் ரெட்டி ,தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்த அண்ணாமலைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அமர் பிரசாத் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணாமலைக்கும், விஜய்க்கும் இடையே தான் போட்டி

வருங்காலம் என்பது அண்ணாமலைக்கும் முதல்வர் விஜய்க்கும் இடையேதான் போட்டி இருக்கும் என்றும் அண்ணாமலை கண்டிப்பாக முதல்வராக வருவார் என்று ,பாஜகவின் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு தலைவராக இருந்த அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்

=============