Amit Shah said that NDA will win the assembly elections in West Bengal and Tamil Nadu 
இந்தியா

”2026 தேர்தலில் NDA வெற்றி உறுதி” : ஸ்டாலின், மம்தாவுக்கு சவால்

Amit Shah on Tamil Nadu, West Bengal Election 2026 : மேற்கு வங்கம், தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Kannan

தேசிய ஜனநாயக கூட்டணி

Amit Shah on NDA Will Wins Tamil Nadu, West Bengal Election 2026 : அண்மையில் ஒடிசாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் 10வது முறையாக முதல்வரானார் நிதிஷ்குமார். அதிக இடங்களை கைப்பற்றிய தனிப்பெரும் கட்சியாக பாஜக இருக்கிறது.

பாஜக தொடர் வெற்றி

இந்தநிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமி,ஃ ஷா, “ 2014 மக்களவைத் தேர்தல் தொடங்கி தற்போது வரை (2025) பாஜக தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வருகிறது.

மோடி தலைமை - சிறப்பான ஆட்சி

2024 மக்களவை தேர்தல் வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார் நரேந்திர மோடி. இது பல ஆண்டுகளுக்கு பின்னர் படைக்கப்பட்ட சாதனை. பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில், நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகிறது.

மக்கள் ஏற்காத எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகளுக்கு தலைவர்களோ அல்லது கொள்கைகளோ இல்லை. எனவே, நாட்டின் எந்தப் பகுதியிலும் அவர்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இந்த உண்மையை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஸ்டாலின், மம்தாவுக்கு சவால்

இந்த மேடையில் இருந்து மம்தா பானர்ஜி மற்றும் ஸ்டாலினுக்கு ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பிகாரை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று திருப்பு முனையை ஏற்படுத்தும். அதற்கு தயாராக இருங்கள்.

எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி உறுதி

தேர்தல் முடிவுகள் வரட்டும். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் துடைத்தெறியப்படும். இவ்வாறு அமித் ஷா கூறினார்.

தமிழகம் வருகிறார் அமித் ஷா

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக இடம்பெற்றுள்ளன. விரைவில் அமித் ஷா தமிழகம் வர உள்ளதாகவும் தகவல் நிலவுகிறது. இந்நிலையில், ஸ்டாலினுக்கு அமித் ஷா விடுத்துள்ள சவால் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

================