Amit Shah Says National Democratic Alliance Government Will Be Formed Once Again in Bihar Assembly Election 2025 NDA vs INDIA Google
இந்தியா

NDA Alliance : தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கப்படும்- அமித்ஷா!

Amit Shah Bihar Election Campaign 2025 : நக்சலைட்டு ஒழிப்பால் பீகாரில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Bala Murugan

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கப்படும்

Amit Shah Bihar Election Campaign 2025 : பாட்னா, பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வடையும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பீகாரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், இன்று உள்துறை மந்திரி அமித் ஷா சியாஹரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். சீதாமரியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.அப்போது, நவம்பர் மாதம் 14ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, மதியம் 1 மணிக்கு பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆர்.ஜே.டி. தூக்கி எறியப்படும்

மேலும், ஆர்.ஜே.டி. தூக்கி எறியப்படும் என்று பேசிய அவர்,பேரரசர் சந்திரகுப்த மௌரியர் காலத்திலிருந்து நரேந்திர மோடி வரை, கந்தக், கோஷி மற்றும் கங்கை நதிகள் பீகாரில் வெள்ளப் பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால்,பீகாரை வெள்ளமற்றதாக மாற்ற ஒரு ஆணையத்தை அமைக்கும் என்று கூறினார். மேலும்,கோஷி நதியின் நீர் மிதிலாஞ்சல் பகுதியில் உள்ள 50,000 ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யப் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தொழிற்சாலைகள்

பாகிஸ்தானுக்கு எதிரான எதிர்கால ராணுவத் தாக்குதல்களில், பீகாரில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் பாதுகாப்பு வழித்தடத்தில் பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தொழிற்சாலைகளை அமைப்போம், கூடுதலாக MSME எம். எஸ்.எம்.இ தொழில்துறை பூங்காக்களை உருவாக்குவோம்.நக்சல்கள் இல்லாத பீகாரில் முதன்முறையாக வாக்காளர்கள் மாலை 5 மணி வரை வாக்களிக்க இருக்கிறார்கள். ஆர்ஜேடி-காங்கிரஸ் ஆட்சியின் கீழ், மாவோயிஸ்ட் பயம் காரணமாக வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி வரைதான் நடைபெற்றது என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

நிதிஷ் குமார் செழிப்பான பாதைக்கு வழி வகுத்தார்

மேலும், இதைத்தொடர்ந்து பேசிய அவர், சீதாமரியில் உள்ள சீதா கோவில் மத, கலாச்சார, கல்வி மையமாக மாறும். சீதா கோவிலின் கும்பாபிஷேக நாளில் சீதாமர்ஹியில் இருந்து அயோத்திக்கு வந்தே பாரத் ரெயிலை நாங்கள் தொடங்கி வைக்க உள்ளோம்.ஆர்ஜேடி அரசு பீகாரை கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் கூடாரமாக மாற்றியது. நிதிஷ் குமார் செழிப்பான பாதைக்கு வழி வகுத்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பீகாரில் மூடப்பட்ட அனைத்து சர்க்கரை ஆலைகளும் இரண்டரை ஆண்டுகளில் மீண்டும் திறக்கப்படும்.

பீகாரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி

பாட்னா, தர்பங்கா, பூர்னியா மற்றும் பாகல்பூர் விமான நிலையங்களை தேசிய ஜனநாயக கூட்டணி உலகத் தரத்திற்கு மாற்றும். பீகாரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கும். லாலுவின் ஆட்சிக் காலத்தில் ஊழல்கள் நிறைந்திருந்ததாக இருந்தது. நிதிஷ் குமார்- நரேந்திர மோடி ஜோடி மட்டுமே பீகாரின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும். லாலுவின் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு பீகாருக்கு ரூ.2.80 லட்சம் கோடி வழங்கிய நிலையில், 10 ஆண்டுகளில் ரூ.18.70 லட்சம் கோடியை பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என்று அவர் கூறினார்.