7,000 ரூபாயில் நிறுவனம் :
Chandrababu Naidu 1st in Richest CM List 2025 : ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் 1992ம் ஆண்டு ’ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட்’(Heritage Foods) என்ற பெயரில் பால் விற்பனை நிறுவனத்தை தொடங்கினார். இதற்காக அவர் முதலில் வெறும் 7 ஆயிரம் ரூபாயை மட்டுமே முதலீடு செய்தார். பின்னர் வங்கியில் ரூ.50 லட்சம் கடன் வாங்கி சித்தூரில் பால் பண்ணையை தொடங்கினார். அவரது மனைவி புவனேஸ்வரி நிர்வாக இயக்குநரானார்.
6,755 கோடிக்கு விரிவாக்கம் :
இந்த நிறுவனம் புவனேஸ்வரியின் திறம்பட்ட நிர்வாகத்தால் 23 ஆண்டுகளில மிகப்பெரிய வளர்ச்சியை கண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் நிறுவனம் விரிவுபடுத்தப்பட்டு, பால் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பால் சார்ந்த விற்பனை பொருட்களும் களை கட்டி உள்ளன. 2024ம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.6,755 கோடி(Heritage Foods Net Worth) சாம்ராஜ்ஜியமாக உயர்ந்திருக்கிறது.
பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு :
இந்த சூழலில் ஏடிஆர் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு அண்மையில் பணக்கார முதல்வர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு முதலிடத்தை பிடித்து உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.931.83 கோடியாக(CM Chandrababu Naidu Net Worth) உள்ளது. பால் வியாபாரத்தில் கோலோச்சுவதன் மூலம் இந்தியாவின் பணக்கார முதல்வராக அவர் உருவெடுத்திருக்கிறார்.
பணக்கார முதல்வர்கள் :
அவருக்கு அடுத்து அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.332.56 கோடி யுடன் 2-வது இடத்தில் உள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.51.93 கோடி, நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ ரூ.46.95 கோடி, ம.பி. முதல்வர் மோகன் யாதவிடம் ரூ.42.04 கோடி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் ரூ.38.39 கோடி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் ரூ.30.04 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.
14வது இடத்தில் முதல்வர் ஸ்டாலின் :
தமிழக முதல்வர் ஸ்டாலின்(MK Stalin Net Worth) 14-வது இடத்தில் உள்ளார். அவரிடம் ரூ.8.88 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. மேற்குவங்க முதல்வர் மம்தா கடைசி இடத்தில் இருக்கிறார். அவரிடம் 15 லட்சம் சொத்துகள் மட்டுமே உள்ளன.
====