Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu has set a Guinness World Record by distributing e-cycles to 5,555 women in a single day 
இந்தியா

ஒரேநாளில் பெண்களுக்கு ”5,555 இ-சைக்கிள்கள்”: ஆந்திரா கின்னஸ் சாதனை

AP CM Chandrababu Naidu distribute e-Cycles to women : ஆந்திராவில் ஒரே நாளில் 5,555 பெண்களுக்கு இ- சைக்கிள்களை வழங்கி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கின்னஸ் சாதனை படைத்து இருக்கிறார்.

Kannan

ஆந்திராவில் நலத்திட்ட உதவிகள்

Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu has set a Guinness World Record by distributing e-cycles to 5,555 women in a single day : அண்டை மாநிலமான ஆந்திராவில் தெலுங்கு தேசம் சார்பில் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. மூத்த குடிமகன்​கள் (வீட்​டில் எத்​தனை பேர் இருந்​தா​லும்), கணவ​ரால் கைவிடப்​பட்ட பெண்​கள், விதவை​களுக்கு தலா ரூ.4 ஆயிரம், மாற்றுத் திற​னாளி​களுக்கு தலா ரூ.6 ஆயிரம், கடும் நோய்​களால் பாதிக்​கப்​பட்​டுள்​ளவர்​களுக்கு தலா ரூ.15,000 என ஒவ்​வொரு மாத​மும் சரி​யாக 1ம் தேதி வழங்​கப்​படு​கிறது.

பெண்களுக்கு இ-சைக்கிள்கள்

முதல்வர் சந்​திர​பாபு நாயுடு தனது குப்​பம் தொகு​தி​யில் உள்ள சாந்​திபுரத்​தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவி குழு​வினருக்கு மொத்​தம் 5,555 இ-சைக்​கிள்​களை வழங்​கி​னார்.

கின்னஸ் சாதனை

சந்​திர​பாபு நாயுடு, மகளிர் உட்பட அனை​வரும் சுமார் 3 கி.மீ தூரம் பொதுக்​கூட்ட மேடை வரை சைக்கிளில் வந்​தனர். 5555 இ-சைக்​கிள்​கள் விநி​யோகம், 3 கி.மீ. தூரம் வரை அனை​வரும் அதனை ஓட்​டியபடி வந்​தது என்​பது கின்​னஸ் சாதனை என கூறி, அங்​கிருந்த கின்​னஸ் புத்தக பிர​தி​நி​தி​கள் அதற்​கான சான்​றிதழை வழங்​கி​னார்.

ஒரே நாளில் 5,555 இ-சைக்கிள்களை வழங்கியதற்காக அவர் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது.

குப்பத்தில் அசெம்பிள் செய்யப்படும் மின்-சுழற்சிகளை கொண்டு பணம் செலவில்லாமல் கூரை சோலார் பேனல்கள் மூலம் இ-சைக்கிள்களை சார்ஜ் செய்யலாம்.

மேலும் அவற்றில் அறுபது கிலோமீட்டர் தூரம் பயணிக்கலாம்.

வரலாற்றை உருவாக்கி இருக்கிறோம்

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘கடந்த காலங்களில் ஒரே நேரத்தில் 3,000 இ-சைக்கிள் வழங்கி கின்னஸ் சாதனையில் இடம்பெற்றோம்.

தற்போது அந்த சாதனையை முறியடித்து 24 மணி நேரத்தில் 5,555 சைக்கிள்களை வழங்கி குப்பத்தில் மீண்டும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று வரலாற்றை உருவாக்கியுள்ளோம்.

சூப்பர் சைக்கிள்கள்

வரும் காலங்களில் இ-சைக்கிள்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இ-சைக்கிள்களுக்கு சூப்பர் சைக்கிள் என்று பெயரிட்டுள்ளோம்.

இதனால் 60 கி.மீ வரை வேலைக்கு எளிதாகச் செல்லலாம். மாணவர்கள் குறைந்த செலவில் பாதுகாப்பாக பயணிக்க முடியும்.

மாதம் ரூ.1,500 சேமிப்பு

இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை மிச்சமாகும்” என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

===========