Andhra Pradesh will also ban children under age of 13 from using social media, state cm Chandrababu Naidu announced. google
இந்தியா

13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை : ஆந்திர அரசு அறிவிப்பு!

கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிழும் 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

Rohini

சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

இளம் வயதினரை பாதுகாக்க அவர் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் ,குழந்தைகளின் செல்போன் பயன்பட்டை தவிர்க்கவும் இந்த தடையை அறிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார் .

இது தொடர்பான கொள்கை, அடுத்த 90 நாட்களில் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் இந்த தடையை, 13 - 16 வயது வரையிலான சிறார்களுக்கும் நீட்டிக்கலாமா என்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

சந்திர பாபு வலியுறுத்தல்

இதில் ஒருசில குழந்தைகள், பெற்றோருக்கு தெரியாமலேயே அவர்களின் மொபைல் போனை எடுத்து, 'அன் லாக்' செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்றும்

'மொபைல் போனில் வீடியோ பார்த்தால் தான் சாப்பிடுவேன் என்றும் சிலர் அடம் பிடிக்கின்றனர்.

மொபைலுக்கு அடிமையாகும் சிறார்கள்

அந்தளவுக்கு சிறு வயதிலேயே மொபைல் போனுக்கு அடிமையாகி வருகின்றனர் இதை கவனத்தில் கொண்டே ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை, நம் நாட்டிலும் அமல்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினர் மத்திய அரசை வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்

மேலும் படிக்க :16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்கத் தடை : டிஜிட்டல் போதையில் இருந்து மீட்க கர்நாடகா அதிரடி!

சமூக ஊடகங்களுக்கு தடை விதித்த அரசு

முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் ஆந்திராவில், 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே முதலிரண்டு மாநிலங்களாக, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில், சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன் படுத்த தடை விதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை பின்பற்றி தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.