Approval for 'Lakshmi Yojana' scheme for women in Delhi: Monthly allowance of ₹2,500 announced!
டெல்லியில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அளித்த முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 மகளிர் உதவித்தொகை வழங்கும் 'டெல்லி லட்சுமி யோஜனா' திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
ஆகஸ்ட் 28 முதல் லட்சுமி யோஜனா
டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு இத்திட்டத்திற்காக ரூ. 5,100 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் 28, 2026 அன்று ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு இத்திட்டம் முறைப்படி அமலுக்கு வரவுள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் பணப்பரிமாற்ற முறை
இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கப்படும்.
ரூ.1,000 பயனாளியின் நேரடி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
மீதமுள்ள ரூ.1,500 தொகையானது பயனாளியின் ஆர்.டி (RD) வங்கிக் கணக்கில் முதலீடு செய்யப்படும். இந்தத் தொகை 3 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ. 58,000 ஆக வழங்கப்படும்.
டெல்லியைச் சேர்ந்த சுமார் 17 லட்சம் முதல் 22 லட்சம் வரை பெண்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பெண்கள் வரும் ஆகஸ்ட் 1 முதல் விண்ணப்பிக்கலாம். இதற்காக தனியாக பிரத்யேக இணையதள வசதியும் உருவாக்கப்படவுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்?
21 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பதாரர் அல்லது அவரது குடும்பத்தினர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் டெல்லியில் வசித்திருக்க வேண்டும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை கிடைக்கும். தகுதியான நபர்கள் அதிகம் இருப்பின், குடும்பத்தின் மூத்த பெண்ணுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
யாரெல்லாம் பயன்பெற முடியாது?
அரசு ஓய்வூதியம் அல்லது பிற அரசு நிதியுதவித் திட்டங்களின் மூலம் பலன் பெறும் பெண்கள்.
சொந்தமாக நான்கு சக்கர வாகனம் வைத்துள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
விண்ணப்பதாரர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது குற்றவியல் பின்னணி இருக்கக் கூடாது.
தமிழகத்தில் இதன் தாக்கம் என்ன?
தமிழ்நாட்டில் தற்போது 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது டெல்லி அரசு ரூ.2,500 ஆக உயர்த்தி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் இத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறுகையில், இக்கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், தொகை உயர்வு குறித்து தமிழக அரசு சார்பில் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
====