Indian Army Chief General Upendra Dwivedi Warns Pakistan on Operation Sindoor 2 
இந்தியா

உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது : ராணுவ தளபதி எச்சரிக்கை!

Indian Army Chief General Upendra Dwivedi Warns Pakistan : ஆப்ரேஷன் சிந்தூர் 2 ஆம் பாகம் வெகு தொலைவில் இல்லை என இந்திய ராணுவ தளபதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

Bala Murugan

இந்திய படைகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளாது

Indian Army Chief General Upendra Dwivedi Warns Pakistan : ஜெய்ப்பூர், ராஜஸ்தானின் அனூப்கார் பகுதியில் ராணுவ நிலையில், இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவிவேதி பல்வேறு கருத்துகளை திறம்பட பேசியுள்ளார். அதாவது, பாகிஸ்தான் பயங்கரவாத ஏற்றுமதியை நிறுத்த வேண்டும்(Pakistan Terrorist Activity). அப்படி இல்லையென்றால், ஆபரேசன் சிந்தூர் 2-ம் பாகம்(Operation Sindoor 2) வெகு தொலைவில் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த முறை இந்திய படைகள் எந்த கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ளாது. பாகிஸ்தான் உலக வரைபடத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று விரும்பினால், பயங்கரவாத ஊக்குவிப்பை நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

சந்தர்ப்பம் விரைவில் வரும்

இதைத்தொடர்ந்து பேசிய அவர், ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும், கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தரப்பம் விரைவில் வரும் என்றும் கூறினார். இதனால், 2-வது முறையாக ஆபரேசன் சிந்தூர் தாக்குதல்(Operation Sindoor Attack) நடத்தப்பட கூடும் என மறைமுகமாக கூறியுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள்(Pahalgam Terror Attack). இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய இருப்பது அம்பலமானது.

நிலைகுலைந்த பாகிஸ்தான்

இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது(India Pakistan War). இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவை இருந்த இடம் தெரியாமல் துவம்சம் செய்யப்பட்டு தரைமட்டமானது.

மேலும் படிக்க : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வரலாற்றில் பதியவேண்டிய ஒன்று- ஏ.பி.சிங்

இதனால், பாகிஸ்தான் நிலைகுலைந்து கடும் பாதிப்புக்குள்ளனாது. பின்னர், இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவான நிலையில், 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு சம்மதம் தெரிவித்ததற்கு பின்னர், போர் சூழல் ஒரு முடிவுக்கு வந்தது.