Assam: Floods intensify; Death toll crosses 100  google
இந்தியா

அசாம் : தீவிரமடையும் வெள்ள பாதிப்பு : 100 கடந்த பலி, 1.47 லட்சம் மக்கள் பாதிப்பு, நிதி திரட்டும் திரை பிரபலங்கள்..!

அசாமில் மழை தீவிரமடைந்து வருவதால் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 கடந்தும், 1.47 லட்சம் மக்கள் பாதிப்படைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rohini

அசாம் , தீவிரமடையும் வெள்ள பாதிப்பு

அசாமில் தீவிரமடைந்து வரும் வெள்ள பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100யை கடந்துள்ளது

வெள்ளத்தில் தத்தளிக்கும் பகுதிகள்

அசாமில் தீவிரமடைந்து வரும் மழை பாதிப்பின் காரணமாக , மாநிலம் முழுவதும் இதுவரை 1.47 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது

குறிப்பாக சோனித்பூர்,, நாகான், கோலாகாட், சிவசாகர், ஹோஜாய், டர்ராங், ஜோர்ஹாட், தேமாஜி, சாரைடியோ, கார்பி ஆங்லாங், லக்கிம்பூர் மற்றும் பிஸ்வநாத் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வரும் அசாம் அரசு

வெள்ள பாதிப்பால பாதிக்கப்பட்டவர்களை அம்மாநில அரசு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.வைத்துள்ளனர்.குறிப்பாக கோலாகாட் மாவட்டத்தில் அதிகபட்சமாக 61,735 பேரும், சிவசாகரில் 43,492 பேரும், ஜோர்ஹாட்டில் 24,283 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், வீடுகள் மற்றும் சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் , நிதி திரட்டும் பிரபலங்கள்

அசாமில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பாதிப்பால் ,பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதாலும், பலர் உயிரிழந்தாலும் அசாம் மக்கள் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 631 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி, 7.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில்,

184 நிவாரண முகாம்களில் சுமார் 28,700 மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். அசாம் மட்டுமின்றி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்திலும் வெள்ளத்தால் 35 பேர் பலியாகி, 7,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த விதாமான நிதி உதவியையும் , பொருளிதவியையும் செய்ய தவறியதாக எதிர்கட்ட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன .

குறிப்பாக ஹாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் மற்றும் நடிகை ஆலியா பட் ஆகியோர் வெளியிட்ட பதிவில், ‘பாதிக்கப்பட்ட அசாம் மக்களுக்கு உணவு, மெத்தைகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் அவசர மீட்பு உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன.

எனவே அனைவரும் தாராளமாக நிதியுதவி வழங்கி மக்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று கதறி முறையிட்டு நிவாரண நிதி திரட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று பதிவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

=============================