சட்டமன்ற தேர்தல்
5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 மாநிலங்களுக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில் ,முதற்கட்ட வாக்குப்பதிவானது நாளை நடைபெறுகிறது
152 தொகுதி: முதற்கட்ட வாக்குப்பதிவு '
மேற்கு வங்கத்தில் உள்ள 152 தொகுதிகளுக்கு , சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குபதிவானது நடைபெற இருக்கிறது
3.60 கோடி பேர் வாக்குரிமை அளிக்க தகுதி பெற்றவர்
மேற்குவங்கத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் , ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.60 கோடி பேர் வாக்குரிமை அளிக்க தகுதி பெற்றவர்களாக இருக்கின்றனர்.
பாதுகாப்பில் மத்திய பாதுகாப்பு படைகள்
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் உள்ள 152 தொகுதிகளில், பதற்றத்தை தணிக்க 2.4 லட்சம் வீரர்கள் அடங்கிய மத்திய பாதுகாப்பு படைகள் பாதுகாப்பில் தயார் நிலையில் இருக்கின்றனர் .
இதற்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல்கள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள்
,மேற்கு வங்கத்தில் நடைபெறும் முதற் கட்ட வாக்குப்பதிவை அடுத்து அங்கு தேர்தல் ஆணையம் சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும்.
பின்இருக்கையில் யாரையும் ஏற்றக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மருத்துவ தேவை, குடும்ப விழாக்கள், பள்ளிகளுக்கு மாணவ, மாணவியரை அழைத்துச் செல்வது ஆகிய பணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல வீட்டு உபயோக பொருட்கள், உணவு வகைகளை விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
===========