Assembly elections held in Kerala, Tamil Nadu plantation workers banned from entering the state google
இந்தியா

Kerala Election : தமிழக தோட்ட தொழிலாளர்களுக்கு கேரளம் வரத்தடை : ஏப். 8,9 தேதிகளில் அனுமதி மறுப்பு... தேர்தல் ஆணையம்

கேரளத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், தமிழக தோட்ட தொழிலாளர்கள் அந்த மாநிலத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Kannan

கேரள சட்டமன்ற தேர்தல்

140 உறுப்பினர்களை கொண்ட கேரளத்தில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. பிரசாரம் இரண்டு தினங்களே இருப்பதால், பரப்புரை அனல் பறக்கிறது.

தமிழக தோட்ட தொழிலாளர்கள்

தமிழக- கேரள எல்​லை​யில் தேனி மாவட்​டம் அமைந்​துள்​ளது. இங்​கிருந்து குமுளி, கம்​பம்​ மெட்​டு, போடிமெட்டு வழி​யாக கேரளம் செல்​வதற்​கு மலைச்​சாலைகள் உள்​ளன. இடுக்கி மாவட்​டத்​தில் உள்ள ஏலக்​காய், காபி, தேயிலை எஸ்​டேட்டு​களில் தமிழக தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

9ம் தேதி வாக்குப்பதிவு

இதற்காக இவர்கள் தினமும் இடுக்கி தோட்டங்களுக்கு சென்று வேலை பார்க்கின்றனர். வாகனங்கள் மூலம் தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். இந்​நிலை​யில், 9ம் தேதி கேரள சட்​டப்​ பேரவைக்கான வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது.

தொழிலாளர்கள் வருவதற்கு தடை

கடந்த சில வாரங்​களாக மாநில எல்​லை​யில் இரு மாநில அதி​காரி​கள் சார்​பில் சோதனை​கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. . இதன் ஒருபகு​தி​யாக, கேரளத்​தில் வாக்​குப்​ப​திவு நடை​பெறும் ஏப்.9 மற்​றும் அதற்கு முந்​தைய நாளான 8 ஆகிய 2 நாட்​கள் கேரளா​வுக்​குள் தோட்ட தொழிலா​ளர்​களை ஏற்றிக் ​கொண்டு வரும் ஜீப்​பு​களுக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

ஊதியத்துடன் கூடிய விடுமுறை

அதே​நேரம், வழக்​க​மான பொது மற்​றும் தனி​யார் போக்​கு​வரத்​துக்கு எவ்​வித கட்​டுப்​பாடும் இல்​லை. வாக்​குப் பதிவுக்​காக கேரளத்​தில் 9ம் தேதி சம்​பளத்​துடன் கூடிய பொது விடு​முறை அளிக்​கப்​பட்​டுள்​ளது.

அன்று எஸ்​டேட் உள்​ளிட்ட பல இடங்​களில் எந்த வேலையும் நடை​பெறாது. மேலும் அரசு, பொதுத்​துறை மற்​றும் தனி​யார் நிறுவன தொழிலா​ளர்​களுக்​கும் விடு​முறை அளிக்​கப்​பட்​டுள்​ளது.

வாக்​குப்​ப​திவு நாளில் வெளி​மாநிலத்​தில் இருந்து அதி​கப்​படி​யான ஆட்​கள் இங்கு வரு​வது நன்​னடத்தை விதி​களுக்கு எதி​ரானது என்​ப​தால், இந்​தக் கட்​டுப்​பாடு விதிக்​கப்​பட்​டுள்​ளது. இதை முழுமையாக பின்பற்றுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

=====