Assembly elections in the states of Puducherry, Kerala, and Assam will be held tomorrow. google
இந்தியா

3 State Elections : புதுச்சேரி, கேரளம், அசாமில் நாளை தேர்தல் : 7 to 6 மணி வரை வாக்குப்பதிவு : மத்திய படைகள் குவிப்பு!

புதுச்​சேரி, கேரளம், அசாம் மாநிலங்​களில் ஒரே கட்​ட​மாக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

Kannan

5 மாநிலத் தேர்தல்

இந்த ஆண்டு புதுச்​சேரி, கேரளம், அசாம், தமிழகம், மேற்கு வங்க மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

புதுச்சேரி தேர்தல்

புதுச்​சேரி​யில் மொத்​தம் 30 தொகு​தி​கள் உள்​ளன. இந்​தத் தேர்​தலில் ஆளும் என்.ஆர் ​காங்​கிரஸ் - பாஜக - அதி​முக - லஜக ஒரு அணி​யாக வும்,

காங்​கிரஸ் - திமுக - விடு​தலைச் சிறுத்​தைகள் ஒரு அணி​யாக​வும் மோதுகின்​றன. இந்​திய கம்​யூனிஸ்ட் ஒரு தொகு​தி​யிலும், மார்க்​சிஸ்ட் 2 தொகு​தி​களி​லும் தனி​யாக போட்​டி​யிடு​கின்​றன. தவெக கூட்​டணி 30 தொகு​தி​களி​லும் போட்​டி​யிடு​கிறது. நாம் தமிழர் கட்சி 28 தொகு​தி​களில் தனித்​துப் போட்​டி​யிடு​கிறது.

அதிருப்தியாளர்கள் தனித்து போட்டி

பிர​தான கட்​சிகளில் சீட் கிடைக்​காத முக்​கிய பிர​முகர்​கள் சிலரும் பல்​வேறு தொகு​தி​களில் சுயேச்​சை​யாக களமிறங்​கி​யுள்​ளனர். புதுச்​சேரி தேர்​தல்​ களத்​தில்​ மொத்​தம்​ 117 சுயேச்​சைகள்​ உட்​பட 294 வேட்​பாளர்​கள்​ உள்​ளனர்.

கேரளம் சட்டசபை தேர்தல்

கேரளத்தில் மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான ஆளும் இடது ஜனநாயக முன்​னணி, காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி, பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி இடையே மும்​முனை போட்டி நில​வு​கிறது.

140 தொகுதிகளிலும் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா, காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா? பாஜகவின் வெற்றி வாய்ப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் பேரவை தேர்தல்

அசாமில் ஆளும் பாஜக - காங்​கிரஸ் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. அந்த மாநிலத்​தில் 126 தொகு​தி​கள் உள்​ளன. ஆளும் தேசிய ஜனநாயக் கூட்​ட​ணி​யில் பாஜக 89 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது.

அதன் கூட்​டணி கட்​சி​யான அசாம் கண பரிஷத் 26, போடோலேண்ட் மக்​கள் முன்​னணி 11 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கின்​றன. காங்​கிரஸ் தலை​மையி​லான அசாம் சோன்​மிலிட்டோ மோர்ச்சோ கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் 95 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது.

நாளை வாக்குப்பதிவு

மூன்று மாநிலங்களிலும் நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

=================