"Viksit Bharat 2047 Goal is Achievable; Prime Minister Modi's Pledge in Delhi: An Appeal to the Nation's Citizens" Google
இந்தியா

விக்சித் பாரத் 2047 இலக்கு சாத்தியம் : டில்லியில் பிரதமர் மோடி உறுதிமொழி : நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்...

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் வது முறை கொடியேற்றினார் வந்தே மாதரம் பாடல் முதல் முறை டெல்லி செங்கோட்டையில் ஒலித்தது ...

NARENDRAN K

80வது சுதந்திர தின உரையில் பிரதமர் பேசியது :

தொடர்ந்து 12வது முறையாக டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றியே பிரதமர் நரேந்திர மோடி நட்டு மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்

அதில் அவர் மிக முக்கியமாக இந்தியா 2047க்குள் வளர்ச்சி அடைந்த பாரதமாக மாற வேண்டும் எனவும் அதற்காக நட்டு மக்கள் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் அவர் தனது உரையில் பேசிருந்தார் .

சப்த தாரா” என்ற புதிய வளர்ச்சி திட்டத்தை பிரதமர் முன்வைத்தார்:

உற்பத்தித் துறை, வேளாண் உணவு பதப்படுத்தல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை, தளவாடம், பாதுகாப்புத் துறை, பசுமை மற்றும் நீல பொருளாதாரம், இந்தியாவின் மென்மையான சக்தி (Soft Power) ஆகிய ஏழு துறைகளை அடிப்படையாகக் கொண்ட “சப்த தாரா” என்ற புதிய வளர்ச்சி திட்டத்தை பிரதமர் முன்வைத்தார்.

இந்த ஏழு துறைகளும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் சக்திகளாக அமையும் என்றார்.

இந்தியா சக்திவாய்ந்த பொருளாதார நாடுகளின் பட்டியலில் இணைந்தது :

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா “Fragile Five” பொருளாதார நாடுகளின் பட்டியலில் இருந்து உலகின் முக்கிய பொருளாதார சக்திகளில் ஒன்றாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இதற்கு நாட்டின் மக்களே காரணம் என பாராட்டினார்

இதற்கு மிக முக்கிய கரணம் நம் நாட்டில் உள்ள இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும், தொழில்நுட்பம், புதுமை மற்றும் தன்னிறைவு மூலம் இந்தியா உலக அரங்கில் முன்னணி இடத்தைப் பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், “வந்தே மாதரம்” முழக்கம் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் ஒலிக்க வேண்டும் என்று கூறி தேசிய ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்

இயற்கை பேரிடர் காலங்களில் மத்திய அரசு மக்களுக்கு துணை நிற்கும் :

இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து துணை நிற்கும் என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒற்றுமையுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் வலியுறுத்தினார்.