ATM usage has decreased Due To Digital UPI Transactions report 2025 released by the Reserve Bank Of India Reserve Bank Of India
இந்தியா

ஏடிஎம் பயன்பாடு குறைந்துள்ளது- ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை!

ATM Transactions 2025 : இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால், ஏ.டி.எம்., பயன்பாடு மற்றும் அதன் எண்ணிக்கை குறைந்து உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Baala Murugan

ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு

RBI Report on ATM Transactions vs Digital Transactions 2025 : டிஜிட்டல் பணப்பரிவா்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ள நிலையில், இந்த புதிய விதிமுறைகள் அடுத்தாண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவிதமான அத்தாட்சிகள் சமர்ப்பிக்க வேண்டும்

அதாவது, டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைக்கு பயனா்களின் அடையாளத்தை உறுதி செய்ய இரு விதமான அத்தாட்சிகளை சமா்ப்பிக்கும் நடைமுறை வேண்டும் என்று வலியுறுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்று தெரிவித்த ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகளுக்கு பயனரின் அடையாளத்தை உறுதி செய்ய, கூடுதல் அத்தாட்சிகளை அனுமதிக்கும் புதிய விதிமுறைகளையும் அறிவித்தது.

அதிக சிக்கல் கொண்ட பணப் பரிவா்த்தனைகள் குறித்து தெரியப்படுத்தவும், உறுதி செய்யவும் டிஜிலாக்கா் தளத்தைப் பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய விதிமுறை, அடுத்தாண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் ஏடிஎம்களை மூடி வருகின்றன

இதைப்போல், தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வரும் ரிசர்வ் வங்கி தற்போது, மீண்டும் ஒரு கட்டுப்பாடை விதித்துள்ளது. அதாவது, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் யு.பி.ஐ., போன்ற டிஜிட்டல் முறைகளுக்கு மாறியுள்ளதால், ரொக்கமாக பணத்தை செலவிடுவது குறைந்துள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் உள்ள ஏ.டி.எம்.,களை வங்கிகள் மூடி வருகின்றன.

அதேநேரம், புதிய வங்கி கிளைகளின் எண்ணிக்கை 2.80 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் மொத்தம் 1.64 லட்சம் வங்கி கிளைகள் உள்ளன. குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் அதிக கிளைகளைத் துவங்கியுள்ளன. இதேநேரத்தில், பயனர்களின் ஏடிஎம் உபயோகம் அதிகரித்துள்ளதால், அடுத்த கட்ட முடிவு தீவிரமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.