இந்தியா - ஆஸ்திரேலியா
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அந்நாட்டு பிரதமருடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாடுகள் இடையே 18 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை
வரலாற்று சிறப்பு மிக்க மைல்கல்லாக, இந்தியாவுக்கு நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் யுரேனியம் சப்ளை செய்ய ஆஸ்திரேலியா ஒப்புக் கொண்டது.
சோழர் கால சாமி சிலைகள்
இந்நிலையில், ஆஸ்திரேலியா வசம் இருக்கும் சோழல் காலத்து சாமி சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அந்தநாடு முன்வந்து இருக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த பழங்கால பொக்கிஷங்களான நந்தி, பத்ரகாளி மற்றும் 6 முகம் கொண்ட முருகன் சிலையை ஒப்படைக்க ஆஸ்திரேலியா அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
சோழர் கால பொக்கிஷங்களான இந்த சிலைகள், பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு, ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா அருங்காட்சியகம்
ஆஸ்திரேலியாவில் உள்ள நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில், தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட பல சோழர் காலச் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
திரிசூலத்துடன் கூடிய பத்ரகாளி
இது திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை சேர்ந்தது. கிபி.13 முதல் 16ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்ட கோவில் இது.
சக்தியின் உக்ர வடிவமான பத்ரகாளி அம்மன் உருவம் கொண்ட திரிசூலம் இது. உலோகத்தால் வடிவமைக்கப்பட்டது.
நந்தி கல் சிலை
இந்தசிலையில் கோல்லுமாங்குடி விஸ்வநாதர் கோவிலை சேர்ந்தது தான். சிவனின் வாகனமாக நந்தியை குறிக்கிறது. சைவ கோவில் மரபில் அலங்கார வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட சிலை இது.
கார்த்திகேயன் கற்சிலை
தமிழகத்தின் மானம்பாடி நாகநாத சுவாமி கோவிலை சேர்ந்த சிலை இது. ஆறு தலைகளுடன், கலைவேலைப்பாடு மிக்கதாக இந்தச் சிலை திகழ்கிறது. அலங்கார நுணுக்கங்களுக்கு பெயர் பெற்ற சோழர் காலத்தில், 11ம் நூற்றாண்டில் இந்த சிலை வடிக்கப்பட்டு இருக்கலாம்.
பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி
இந்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளால் இந்த சிலைகள் படிப்படியாக தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் பிரதமர் மோடியின் பங்களிப்பும் அளிப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.
=============