Aviation Fuel Prices Set to Double—Will Ticket Fares Rise?
ஈரான் - இஸ்ரேல் அமெரிக்க போர்
Flight Ticket Price Increased in India : ஈரான் மீதான இஸ்ரேல் அமெரிக்க போர் காரணமாக ஈரான் கடல்வழிப்பாதையான ஜார்முஸ் ஜலசந்தியை மூடியது.
சமையல் எரிவாயு பற்றாக்குறை
இதன் காரணமாக சமையல் எரிவாயு பற்றாக்குறை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு என அடுத்தடுத்து விலை உயர்வும் தட்டுபாடும் பரவலாக காணப்பட்டது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
எனினும் இந்தியாவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு இல்லை என்றும் போதிய இருப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் விமான எரிபொருள் விலையும் தற்போது அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக விமான எரிபொருளின் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது.
ரூ.96,638ல் இருந்து ரூ.2.07,341
விமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் தகவலின் படி டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.96,638ல் இருந்து ரூ.2.07,341 ஆக உயர்ந்ததுள்ளது.
விமான எரிபொருள் விலை உயர்வு
ஏற்கனவே கடந்த மாதம் 1ம் தேதி விமான எரிபொருள் விலை 5.7 சதவீதம் உயர்த்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் மட்டும் இரண்டாவது முறையாக விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
2 லட்சத்தை எட்டுவது முதல்முறை
எனினும் விமான எரிபொருளின் விலை இரண்டு லட்சத்தை கடப்பது இதுதான் முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
விமான கட்டணம் அதிகரிப்பு
மேலும் விமான எரிபொருள் விலை எப்போதும் விட இரு மடங்குக்கு மேல் உயர்ந்ததுள்ளதால் விமான பயணக் கட்டணமும் அதிகரிக்கக் கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விமான பயணிகள் வருத்தத்தில் உள்ளனர் என்றே சொல்லலாம்.