26 Lakhs Lamps at Ayodhya Deepotsav Lights 2025 for Guinness World Record in Ayodhya Ram Temple 
இந்தியா

தீபாவளிக்கு 26 லட்சம் விளக்குகள்: சாதனைக்கு தயாராகும் அயோத்தி

26 Lakhs Lamps at Ayodhya Lights 2025 for Guinness World Record : ராமபிரான் கோவில் அமைந்துள்ள அயோத்தியில், இந்த ஆண்டு 26 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

Kannan

பழமை வாய்ந்த அயோத்தி

26 Lakhs Lamps at Ayodhya Lights 2025 for Guinness World Record : உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி இதிகாச கதையோடு தொடர்பு கொண்டது. ராமாயண கதையின் படி, இந்த பகுதியை தான் தசரதர் ஆட்சி செய்ததாகவும், ராம்பிரான் அயோத்தி அரசராக சிறப்பான ஆட்சியை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, வட இந்தியர்களின் புண்ணியத் தலங்களில் ஒன்றாக அயோத்தி(Ayodhya Deepotsav 2025) எப்போதும் திகழ்ந்து வருகிறது.

தீபாவளிக்கு அகல் விளக்குகள் ஏற்றுதல்

உத்தர பிரதேசத்​தில் பாஜக ஆட்சி அமைந்​தது முதல் ஒவ்​வொரு தீபாவளி பண்​டிகைக்​கும் அயோத்​தி​யில் லட்​சக் கணக்​கில் அகல் விளக்​கு​கள் ஏற்​றப்​படு​கின்​றன. இது உலக சாதனை​யாகப் பதி​வாகி வரு​கிறது. அந்த வகை​யில், தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு வரும் 19ம் தேதி தீபத் திருவிழா(Diwali Festival 2025 Date) நடை​பெற உள்​ளது.

26 லட்சம் அகல் விளக்குகள்

அப்போது 26 லட்​சம் அகல் விளக்​கு​கள் ஏற்ற திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதன்​முலம் கடந்த ஆண்​டு (24 லட்​சம் அகல் விளக்​கு​கள்) சாதனை முறியடிக்​கப்பட உள்​ளது. இந்த ​விளக்​கு​கள் சரயு நதி​யின் 56 கரைகள், ராம் கீ பேடி, நகரில் உள்ள மற்ற கோயில்​கள் மற்​றும் குடி​யிருப்​பு​களை ஒளிரச் செய்ய உள்​ளன.

ராமர் திரும்பிய நாள் தீபாவளி :

நரகாசுரன் வதைக்கப்பட்டதை தமிழகத்​தில் தீபாவளியாக கொண்டாடுவதை போன்று, உத்தர பிரதேசத்தில் இலங்கை போருக்கு பிறகு ராமர் அயோத்தி திரும்பிய நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அகல் விளக்குகளை ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை அயோத்தி மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. தேவையான பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விளக்குகளை ஏற்றுவதற்கான பக்தர்களும் பதிவு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த நிகழ்வை காண பல்லாயிரக் கணக்கானோர் வருவார்கள் என்பதால், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் திட்டமிடப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

டிரோன்கள் மூலம் ராமாயண காட்சிகள்

அகல் விளக்குகளின் ஒளியால் மட்டுமின்றி, டிரோன்களின் வண்ண ஜாலத்தாலும் அயோத்தி மேலும் ஒளிர இருக்கிறது. இதற்கான தீபாவளி நாளில் 1,100 டிரோன்​கள் வானில் பறக்​க​ விடப்பட உள்​ளன. இவற்​றின் மூலம் ராமாயணத்​தின் காட்​சிகள் ஒளிப்​படங்​களாக சித்​தரிக்​கப்பட்டு, காண்போரை பரவசப்படுத்தும்.

மேலும் படிக்க : புரட்டாசி கடைசி சனிக்கிழமை : ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வெள்ளம்

அயோத்தியில் கொண்டாடப்படும் தீபாவளி வெறும் திருவிழா மட்டும் கிடையாது. ஆன்​மிகம், நம்​பிக்​கை, கலாச்​சா​ரம் உள்​ளிட்​ட​வற்​றின் மெகா விழா​வாக கொண்​டாடப்படுகிறது. மேலும் அகல் விளக்கு நிகழ்வை கண்டு களிக்க வெளிநாட்டவரும் வருகை தருவார்கள், இதன் மூலம் அயோத்தி உலக அளவில் புகழ்பெறும்.

======================