Ban on the use of metal needles in food products and food packets FSSAI issues strict order r  google
இந்தியா

உணவுப் பொருட்​கள் மற்​றும் பாக்​ட்​டு​களில் ஸ்டேப்ளர் பின், உலோக ஊசிகள் பயன்படுத்தத் தடை : ”FSSAI அதிரடி உத்தரவு”

உணவுப் பொருட்​கள் மற்​றும் உணவு பாக்​கெட்​டு​களில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின், வயர்​களை பயன்​படுத்​தக்​கூ​டாது என்று இந்​திய உணவு பாது​காப்​பு, தர நிர்ணய ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

Rohini

உணவு பார்சல்களில் ஸ்டேப்ளர் பின் பயன்படுத்த தடை

உணவுப் பொருட்​கள் மற்​றும் உணவு பாக்​கெட்​டு​களில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின், வயர்​களை பயன்​படுத்​தக்​கூ​டாது என்று இந்​திய உணவு பாது​காப்​பு, தர நிர்ணய ஆணை​யமான Fssai உத்​தர​விட்​டுள்​ளது.

செய்தித்தாள்களில் உணவு வழங்கவும் தடை

ஏற்கனவே உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம் ,செய்​தித்​தாளில் உள்ள அச்​சுமை​யில் தீங்கு விளைவிக்​கும் ரசாயனங்​கள் உள்ளதாக கூறி உணவுப் பொருட்​களை செய்​தித்​தாள்​களில் பொட்​டலம் கட்​டக்​கூ​டாது

என்று இந்​திய உணவுப் பாது​காப்​பு, தர நிர்ணய ஆணை​யம் (எப்​எஸ்​எஸ்​ஏஐ) சில நாட்​களுக்கு முன்பு உத்​தர​விட்​டிருந்தது குறிப்பிடத்தக்கது

ஆணையம் தெரிவித்துள்ளதாவது

உணவுப் பொருட்​கள் மற்​றும் அலங்​கார கேக்​கு​களில் மறைந்​திருக்​கும் உலோக ஊசிகளை பொது​மக்​கள் விழுங்​கி​விடும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன.

இதனால் அதனை பயன்படுத்துவோரின் உடல்நிலையானது கடுமையாக பாதிகப்படுவதோடு குழந்தைகளுக்கும் கடுமையான உடல்​நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது

FSSAI அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது

உணவு கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்​கள், அலங்​கரிக்​கப்​பட்ட கேக்​கு​கள், கேக் பெட்​டிகள், இனிப்பு பெட்​டிகள், தின்​பண்ட பொட்​டலங்​கள், உணவு பார்​சல்​கள், உணவுப் பாக்​கெட்​டு​களில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின், வயர்​களை கண்​டிப்​பாக பயன்​படுத்​தக்​கூ​டாது என்றும்

மீறுவோர் மீது கடுமையாக நடவடிக்கை : FSSAI

இந்த அறி​வுறுத்​தலை மீறு​வோர் மீது உணவுப் பாது​காப்​பு, தர நிர்ணய சட்ட விதி​களின்​படி கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு எப்​எஸ்​எஸ்ஏஐ உத்​தர​வில் தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

================