Bank employees are on strike today, pressing for demands that include the old pension scheme
வங்கி ஊழியர்கள்
நாடு முழுவதும் செயல்படும் வங்கிகளில் லட்சக் கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். வங்கிகள் மூலமாக நாள்தோறும் லட்சக் கணக்கான மக்கள் சேவைகளை பெற்று வருகின்றனர்.
வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள்
வங்கி ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து அடிக்கடி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பழைய ஓய்வூதியம், வாரத்தில் 5 நாட்கள் வேலை அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
2 ஆண்டுகளாக கோரிக்கை நிறைவேறவில்லை
இதுதொடர்பாகசெய்தியாளர்களிடம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளரும், வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளருமான சி.எச்.வெங்கடாச்சலம், ”2024 மார்ச்சில் கையெழுத்தான இருதரப்பு ஒப்பந்தத்தில், வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க வங்கி நிர்வாகங்கள் சம்மதித்தன.
இதற்காக, திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி வேலை நேரத்தை வாடிக்கையாளர் சேவைக்காக 40 நிமிடங்கள் அதிகரிக்கவும் ஊழியர்கள் ஒப்புக்கொண்டனர். இந்த ஒப்பந்தம் மத்திய நிதி அமைச்சக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியும் நிலுவையில் உள்ளது.
வாரம் 5 நாட்கள் வேலை
எனவே, வாரம் 5 நாட்கள் வேலைமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒப்புக்கொண்டபடி, அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும். இதுதவிர, புதிதாக பணிக்குச் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டம்
ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் தொகையை தற்போதைய நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகையை வங்கிகளே முழுமையாக ஏற்க வேண்டும். பணிக்கொடை உச்ச வரம்பை உயர்த்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உட்பட 7 சங்கங்கள் பங்கேற்றுள்ளன.
8 லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்
தமிழகத்தில் 60 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 8 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்று இருக்கிறார்கள்
நான்கு நாட்கள் தொடர் விடுமுறை
நாளை (12-ம் தேதி) சனி, 13-ம் தேதி ஞாயிறு, 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஆகிய 3 நாட்களும் அரசு விடுமுறை என்பதால் வங்கிகள் செயல்படாது. இதனால், வங்கி சேவை தொடர்ந்து 4 நாட்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
=====