BCG Report 2025 on Indian banks interest rate changes 
இந்தியா

வட்டி விகித மாற்றங்களில் இந்திய வங்கிகள் : பிசிஜி ஆய்வு வெளியீடு

BCG Report 2025 on Indian Banking : வட்டி விகித மாற்றங்களில் இந்திய வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து பிசிஜி அறிக்கை வெளியிட்டுள்ளது.

MTM

BCG Report 2025 on Indian Banking : இந்திய சேமிப்பாளர்கள் மியூச்சுவல் பண்டுகள், ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் நேரடி முதலீடுகள் போன்றவற்றை அதிகம் நாடும் நிலையில், சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் பற்றிய தரவுகளை வங்கிகள் பகுப்பாய்வு செய்ய வேண்டுமென பாஸ்டன் கன்சல்டிங் குரூப்(Boston Consulting Group -BCG) பரிந்துரைத்துள்ளது.

மேலும், இந்திய வங்கிகள் வாடிக்கையாளர் சேமிப்பு மனப்பாங்கை புரிந்து கொள்ள டேட்டா சயின்சை விரைவில் பயன்படுத்தத் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

Interest Rate Sensitivity in Indian Banking’ என்ற தலைப்பில் வெளியான இந்த ஆய்வில், ரெப்போ வட்டி விகிதங்கள், கடன்கள், வைப்புத்தொகைகள் மற்றும் நிகர வட்டி வருமானத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை பகுப்பாய்வு செய்துள்ளனர்.

குறிப்பாக ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் பொதுத்துறை வங்கிகளில் 1.56% வரை நிகர வட்டி வருமானம் குறைகிறது. வைப்பு தொகைகள் மீதான வட்டி மாற்றங்கள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு, இந்திய வங்கிகள் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் புதிய நிதி உத்திகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.