இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்- இஸ்ரோ
ISRO To Launch CMS 03 India's Heaviest Communication Satellite : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என்றால் தெரியாதோர் யாரும் கிடையாது. இந்நிலையில், இஸ்ரோவில் இருந்து அவ்வப்போது செயற்கைகோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, விண்வெளி குறித்து ஆராய்ச்சி செய்யப்படும். விண்ணில் ஏவப்படும் செயற்கைகோளின் வெற்றியடைவது, தோல்வியடைவது குறித்து இந்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் கொண்டாட்டம் இருக்கும். தொடர் முயற்சி மற்றும் உழைப்பின் மூலம் இன்றுவரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவை வாண்வெளி அமைப்பில் தன்னை முன்னிறுத்தி தொடர் சாதனை புரிந்து வருகிறது.
சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வரும் நவம்பர் 2ம் தேதி சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும். இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான 4,400 கிலோகிராம் எடையை சிஎம்எஸ்-03 கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். கடல் பகுதி முழுவதும் தகவல் தொலைத் தொடர்பு கவரேஜை வழங்க வடிவமைக்கப்பட்டு உள்ளது என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுதல் வேலைகள் ஆரம்பம்
இந்நிலையில், ஏவுதலுக்கு முந்தைய நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்றதை அடுத்து ராக்கெட் முழுமையாக இணைக்கப்பட்டு அக்டோபர் 26ம் தேதி ஏவுதளத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த, செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளில் இந்தியாவின் பலத்தை உறுதிப்படுத்தும். மனித விண்வெளிப் பயண திட்டங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே செயற்கைகோளின் ஏவுதலுக்கு விஞ்ஞானிகள் தங்களது வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர். நவம்பர் 2 ஆம் தேதி செயற்கைகொள் விண்ணில் ஏவப்பட்டு வெற்றி பெறவேண்டும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.