சர்ச்சையின் பிடியில் டொனால்டு ட்ரம்ப் :
Donald Trump on US India Trade War : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே தினமும் ஏதாவது பிரச்சினை செய்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார் டோனால்ட் டிரம்ப். அமெரிக்காவில் குடியேறியவர்களை வெளியேற்றுவது, வெளிநாடுகளில் தொழிற்சாலைகளை நிறுவும் அமெரிக்க நிறுவனங்களை மிரட்டுவது, அரசு வேலை வாய்ப்பில் கை வைப்பது என அவரது அட்டகாசம் தொடர்கிறது.
உலக நாடுகள் மீது வரிப்போர் :
இந்தநிலையில், 90 நாட்கள் மீது கூடுதல் வரிகளை விதித்து, வரி போரிலும் ஈடுபட்டு வருகிறார். டோனால்ட் டிரம்ப். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அவர் 25 சதவீதம் வரி(US Tariffs on India) விதித்து இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதுதான். மேலும், ரஷ்யாவின் ஒத்துழைப்புடன், இந்தியா மேம்படுத்தப்பட்ட எஸ் 500 ஏவுகணையை(India S-500 Missile) தயாரித்து வருவதும் அமெரிக்காவை எரிச்சலடைய வைத்து இருக்கிறது. இதன் நெருங்கிய நட்பு நாடு என்பதையும் மீறி வரிகளை விதித்து இருக்கிறார் டோனால்ட் டிரம்ப்.
மிரட்டலுக்கு அஞ்சாத இந்தியா :
டோனால்ட் டிரம்பின் மிரட்டல்களை இப்போதெல்லாம் பகிரங்கமாக எதிர்க்க தொடங்கியுள்ளது இந்தியா. ரஷ்யாவுடன் அமெரிக்கா வர்த்தகம் செய்து வருவதை நிறுத்தவில்லை என்பதை பகிரங்கமாக சுட்டிக் காட்டியுள்ள இந்தியா, இதில் உள்நோக்கம் உள்ளது, நீதி, நேர்மை இல்லை என சாடியுள்ளது.
தவிடுபொடியாகும் ட்ரம்பின் தம்பட்டம் :
ட்ரம்பிற்கு உண்மையான காரணம் இந்தியா-ரஷ்யா எண்ணெய் விஷயம்(India Russia Oil Trade US Tariff) அல்ல, ரஷ்யா ஏற்றுமதியை நிறுத்தினால், சர்வதேச அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும், அது அமெரிக்காவையும் பாதிக்கும் என்று ட்ரம்பிற்கு நன்றாகவே தெரியும். அப்படி என்றால் உண்மையான காரணம் என்ன?. இந்தியா- பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக தம்பட்டம் அடித்து வருகிறார் டோனால்ட் டிரம்ப். இதை திட்டவட்டமாக மறுத்து தவிடுபொடியாக்கி வருகிறது இந்தியா.
எஸ் 500 ஏவுகணை, ட்ரம்பின் அச்சம் :
2வது முக்கிய காரணம் ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா, நவீனப்படுத்தப்பட்ட எஸ் 500 ஏவுகணையை தயாரித்து விட்டால், அதன்பிறகு, அமெரிக்காவின் பேட்ரியாட், தாட் போன்ற வான்தடுப்பு அமைப்புகள் சர்வதேச வியாபார சந்தையில் காலாவதி ஆகிவிடும். உலக ஆயுத வியாபாரம் இந்தியாவை நோக்கி திரும்பும். இதுதான் டோனால்ட் டிரம்பின் உதறலுக்கு முக்கிய காரணம்.
கண்ணை உறுத்தும் பொருளாதார வளர்ச்சி :
பிரதமர் நரேந்திர மோடி(PM Narendra Modi) தலைமையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இதன் மேம்பாடு அமெரிக்காவுக்கு சிக்கல்தான். இந்தியா வேகமான மாற்றங்களை நோக்கி நகர்வதை டோனால்ட் டிரம்ப் விரும்பவில்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சியை போல, பாகிஸ்தானை தனக்கு சமமாக இந்தியா இப்போது நினைப்பதில்லை.
மேலும் படிக்க : இந்திய பொருட்களுக்கு ”25% வரி” : நாளை (ஆகஸ்டு.1) முதல் அமல்
இந்தியாவின் போட்டியாளர் சீனா தான் :
தன்னுடைய உண்மையான போட்டியாளராக சீனாவை இந்தியா குறிக்கிறது. தேவைப்பட்டால் அமெரிக்கா, சீனாவுடன் மோதவும் இந்தியா தயாராக உள்ளது. இதுவும் ட்ரம்பிற்கு பிடிக்கவில்லை. அதனால்தான் வரி போர்வையில் இந்தியாவை சீண்டுகிறார். ஒருவிதத்தில் டோனால்ட் ட்ரம்பிற்கு அச்சம் ஏற்பட்டு இருப்பதையே இது உணர்த்துவதாக கருத்து தெரிவிக்கின்றனர் சர்வதேச நிபுணர்கள். ட்ரம்பின் மிரட்டல்கள் தொடர்கதையாக தொடர்ந்தாலும், அதை ஒதுக்கி விட்டு இந்தியா செயல்படுவதை அமெரிக்காவில் நிறுத்த முடியாது என்பதை உண்மை.
====