200 தொகுதிகளில் என்டிஏ வெற்றிமுகம்
Bihar Assembly Election Results 2025 : பிகார் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக, ஜக்கிய ஜனதா தளம், எல்ஜேபி ஆகிய கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி 204 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ், ஆர்ஜேடியின் மகாபந்தன் கூட்டணி வெறும் 36 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இதன்மூலம் பிகாரில் மீண்டும் என்டிஏ ஆட்சி உறுதியாகி இருக்கிறது.
இஸ்லாமியர் வாக்குகளை அள்ளிய என்டிஏ
பிகாரை பொருத்துவரை எப்போதும் இஸ்லாமியர் வாக்குகள் என்பது, காங்கிரஸ், ஆர்ஜேடிக்கே அதிகமாக கிடைக்கும். ஆனால், இந்த முறை இஸ்லாமியர்கள் அருமையாக வாக்களித்து, என்டிஏ கூட்டணியின் மெகா வெற்றிக்கு வித்திட்டு இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகளை என்டிஏ அறுவடை செய்ய மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களே காரணம் எனத் தெரிகிறது.
பிகாரில் 2022ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, முஸ்லிம்கள் மக்கள் தொகையில் 17.7% பேர் உள்ளனர். அவர்கள் அதிகம் வசிக்கும்16 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
NDA ஆதிக்கம், மகாகத்பந்தன் சறுக்கல்
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 2020 சட்டப்பேரவை தேர்தலுடன் ஒப்பிடும்போது கூடுதலாக 8 முஸ்லீம்கள் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சிராக் பாஸ்வானின் எல்ஜேபி கணிசமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட ஆறு இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதேசமயம் ஆர்ஜேடி 7 தொகுதிகளை இழந்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் 4 தொகுதிகளை பறிகொடுத்துள்ளது.
காங்கிரசுக்கு பலத்த அடி
2020 தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் ஆர்ஜேடி 18 இடங்களை வென்றிருந்தது. காங்கிரஸ் ஆறு இடங்களைப் பிடித்திருந்தது. இப்போது அந்த இடங்கள் என்டிஏ வசமாகின்றன.
பெண்களுக்கு ரூ.10,000, ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் வாக்குறுதிகளே தேசிய ஜனநாயக கூட்டணி இஸ்லாமியர்கள் வாக்குகளை வாரிச்சுருட்ட முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
=====