Bihar Assembly Elections 2025, NDA alliance released manifesto with various promises NDA Alliance Manifesto for Bihar Election 2025 - https://x.com/BJP4India?
இந்தியா

NDA Manifesto: விவசாயிகளுக்கு ரூ.9,000, 1 கோடி இளைஞர்களுக்கு வேலை

NDA Alliance Manifesto for Bihar Election 2025 : பிகார் சட்டமன்ற தேர்தலை ஒட்டி என்டிஏ கூட்டணி பல்வேறு வாக்குறுதிகளை கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Kannan

பிகார் சட்டமன்ற தேர்தல்

NDA Alliance Manifesto for Bihar Election 2025 : பிகார் மாநிலத்தில் 121 தொகுதிகளில் நவம்பர் 6ஆம் தேதியும், 122 தொகுதிகளில் நவம்பர் 11ம் தேதியும் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. நவம்பர்14ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நவம்பர் 4ம் தேதி மாலை 5 மணியோடு நிறைவு பெறுகிறது. எனவே, அரசியல் கட்சிகள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

NDA, INDIA கூட்டணி பிரசாரம்

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ்குமார், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கை

28ம் தேதி ‘இந்தியா’ கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பிகார் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து 69 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

என்டிஏ தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள்

* நான்கு நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை

* பிகாரில் ஏழு சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

* பிகாரில் 10 புதிய தொழில் பூங்காக்கள் திறக்கப்படும்

* தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கே.ஜி. முதல் பி.ஜி. வரை கல்வி இலவசம்

* பெண்கள் தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை நிதியுதவி

* ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

* பிகாரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் பயிற்சி மையங்கள்

* விவசாயிகளுக்கு நிதியுதவி ரூ.6,000ல் இருந்து ரூ.9,000ஆக உயர்த்தப்படும்

* பிகார் பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும்.

* உயர்கல்வி பயிலும் அனைத்துப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் மாதம் ரூ.2,000 உதவித்தொகை

* பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்துடன் சத்துள்ள காலை உணவு

* ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி

* 1 கோடி அரசு வேலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள்

* 'மிஷன் கரோர்பதி' மூலம் பெண்கள் தொழில்முனைவோராக மாற்றப்படுவார்கள்

இவ்வாறு அடுக்கடுக்கான வாக்குறுதிகள் என்டிஏ தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டு இருக்கின்றன.

====================