உலக அளவில் அதிக சாலை விபத்துகள் நிகழும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது.
இரு சக்கர வாகன பயன்பாடும் இந்தியாவில் அதிகம்தான். குறுகலான சாலைகள், போக்குவரத்து நெரிசலில் செல்ல இரு சக்கர வாகனங்களை ஏற்றவையாக உள்ளன.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் உயிரிழக்க பெரும்பாலும், ஹெல்மெட் அணியாமல் செல்வதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
எனவே, இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற சட்ட விதி உள்ளது.
இந்த நிலையில் ஜனவரி 2026 முதல் புதிதாக வாங்கும் இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட்டுகள் வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதேபோன்று, அனைத்து பைக்குகளிலும் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துகளை குறைக்கும் நோக்கில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
=====