birth anniversary of Mahatma Gandhi, President, Vice President, PM Modi, paid floral tributes source:thamizhalai,ai generated
இந்தியா

காந்தியடிகளின் ”157வது பிறந்ததாள்” : ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி புகழ் வணக்கம் : நினைவிடத்தில் மரியாதை.!

தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Kannan

காந்தி பிறந்தநாள் - பிரதமர் மரியாதை

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜ்காட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

மக்களவை தலைவர் ஓம் பிர்லா, டெல்லி ஆளுநர் தரன்ஜித் சிங், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மரியாதை

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும், காந்தியடிகளின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்

இதனைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மோடி புகழ் வணக்கம்

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “மகாத்மா காந்தியின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சத்தியம், அகிம்சை, கருணை மற்றும் சேவை ஆகியவற்றின் ஒளி விளக்காகத் திகழ்கிறது.

இது ஒவ்வொரு காலத்திலும் மனிதகுலத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் தொடர்ந்து விளங்கும். ‘எல்லா உயிர்களிடத்தும் பகையற்றவராகவும், நட்புணர்வும் கருணையும் கொண்டவராகவும் இருப்பவர்; எனது என்ற பற்றும் அகந்தையும் இல்லாதவர்; இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுபவர்; பொறுமை கொண்டவர்” என குறிப்பிட்டுள்ளார்.

மாபெரும் தலைவர் காந்தியடிகள் - முதல்வர் விஜய்

முதல்வர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் பதிவில், “அகிம்சை என்னும் பேராயுதத்தால் உலகையே வியக்க வைத்து, இந்தியத் திருநாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத்தந்த மாபெரும் தலைவர்.

நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் அவரது தேசப்பற்றையும், தியாக வாழ்வையும் போற்றி வணங்குகிறேன்.

எளிமை, நேர்மை, மனிதநேயம், சமத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைத் தனது வாழ்வின் நெறிகளாகக் கொண்டு, உலகம் முழுமைக்கும் அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்பிய மாமனிதராகத் திகழ்ந்தவர்.

மகாத்மா காந்தியடிகளின் கனவுகளை நனவாக்கி, அமைதியும், நல்லிணக்கமும், சகோதரத்துவமும் தழைத்திடும் சமூகத்தை உருவாக்கி, நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து, அவர் காட்டிய அறவழியில் நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!” என தெரிவித்துள்ளார்.

==================