Ayushman Bharat scheme  source:thamizhalai,ai generated
இந்தியா

50 கோடி மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ சேவைகள் : 8 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!

இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் ரூ, 5 லட்சம் அளவிலான இலவச மருத்துவ சேவையைப் பெற்று பயன்பெற்று உள்ளனர்.

Kavitha prasanna

எட்டு ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுஷ்மான் திட்டம்

மத்திய பாஜக அரசு கொண்டுவந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 50 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சைகயைப் பெற்றுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

2028-ல் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான்

கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 - ஆம் தேதி பிரதமரின் ஆயுஷ்மான பாரத் ஆரோக்கிய யோஜன திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திடட்தின் முக்கியப் பணியே இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ சிகிச்சைக்களுக்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5 லட்சம் வரையிலான பணமில்லா சிகிச்சை வசதியை வழங்குவதே ஆகும்.

ஆயுஷ்மான் திட்ட வகைகள்

ரூ. 5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சைத் திட்டம் என்பது ஆயுஷ்மான திட்டத்தின் ஒரு பகுதியாகவும் நிதிப் பாதுகாப்பு அம்சமாகவும் உள்ளது.

இதைத்தொடர்ந்து ஆயுஷ்மான் ஆரோக்கிய மகளிர் அதாவது விரிவான ஆரம்ப சுகாதார சேவைகளை ஒருங்கிணைக்கும் திட்டம், ஆயுஷ்மான் டிஜிட்டல் மிஷன் மற்றும் ஆயுச்மான பாரத் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டம் ஆகியவையும் இதில் உள்ளடக்க திட்டங்களாக செயல்பாட்டில் உள்ளது.

ஆயுஷ்மான் சாதனை- பாஜக செய்தித் தொடர்பாளர் நெகிழ்ச்சி

ஆயுஷ்மான திட்டம் எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைத்தொடர்ந்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது,

பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மக்களுக்காக அர்ப்பணித்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. கிட்டத்தட்ட இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் ரூ, 5 லட்சம் அளவிலான இலவச மருத்துவ சேவையைப் பெற்று பயன்பெற்று உள்ளனர்.

உலக அளவில் முதலிடம்

மேலும் இத்திட்டத்தின் கீழ் 13 கோடிக்கும் அதிகமான மருத்துவச் சேர்க்கைகள் நடைபெற்று உள்ளதாகவௌம் உலக அளவில் இந்த எண்ணிக்கை முதலிடத்தித்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இதுதான் மக்கள் நலன். இது பிரதமர் நரேந்திர மோடியின் தாக்கம் என்றும் பெருமிதமாகவும் தெரிவித்துள்ளார்.

=======