BJP has released the list of candidates contesting in 9 constituencies in the Puducherry Assembly elections google
இந்தியா

Puducherry Assembly Election : வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக : மண்ணடிப்பட்டில் நமச்சிவாயம் போட்டி!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டு இருக்கிறது.

Kannan

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்

30 உறுப்பினர்களை கொண்ட புதுச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 9ம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த திங்கட்கிழமை தொடங்கிய நிலையில், 23ம் தேதியுடன் மனுத்தாக்கல் முடிவுக்கு வருகிறது.

முதல்வர் ரங்கசாமி

ஆட்சி பொறுப்பில் இருக்கும் முதல்வர் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ், 2021 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து இருந்தது.

ஆனால், இந்தமுறை அந்தக் கூட்டணி தொடர்வதில் சிக்கல் எழுந்தது.

கூட்டணிக்குள் குழப்பம்

19 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிட விருப்பம் தெரிவித்த ரங்கசாமி, புதிதாக தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வரவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறவும் தயாராக இருந்த ரங்கசாமி, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு, என்ஆர் காங்கிரசை கூட்டணியில் தக்க வைத்தது பாஜக.

கூட்டணி ஒப்பந்தம்

கூட்டணி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தான நிலையில், என்ஆர் காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிடுகிறது.

பாஜக 10 தொகுதிகளில் களமிறங்க, அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

9 வேட்பாளர்கள் அறிவிப்பு

மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 9 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்து இருக்கிறது.

அதன்படி மண்ணாடிப்பட்டு தொகுதியில் ஏ. நமச்சிவாயமும் ஊசுடு (தனி) தொகுதியில் இ. தீப்பாய்ந்தானும்...

காலாப்பட்டு தொகுதியில் பி.எம்.எல். கல்யாணசுந்தரமும் ராஜ் பவன் தொகுதியில் வி.பி. ராமலிங்கமும் முதலியார்பேட்டை தொகுதியில் ஏ. ஜான்குமாரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணவெளி தொகுதியில் ஏம்பலம் ஆர். செல்வமும் திருநள்ளாறு தொகுதியில் ஜி.என்.எஸ். ராஜசேகரன் நிரவியும் டி.ஆர். பட்டினம் தொகுதியில் டி.கே.எஸ்.எம்.

மீனாட்சிசுந்தரமும் மாஹே தொகுதியில் ஏ. தினேஷன் ஆகியோரும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ஆர் காங்கிரஸ் சார்பில் 2 தொகுதிகளில் போட்டியிடும் முதல்வர் ரங்கசாமி, மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை விரைவில் அறிவிக்கிறார்.

அனைவரும் திங்கட்கிழமை மனுத்தாக்கல் செய்வார்கள்.

பாஜக வேட்பாளர்கள்

1. மண்ணாடிப்பட்டு – ஏ. நமச்சிவாயம்

2. ஊசுடு (SC) – இ. தீப்பாய்ந்தான்

3. காலாப்பட்டு – பி.எம்.எல். கல்யாணசுந்தரம்

4. ராஜ் பவன் – வி.பி. ராமலிங்கம்

5. முதலியார்பேட்டை – ஏ. ஜான்குமார்

6. மணவெளி – ஏம்பலம் ஆர். செல்வம்

7. திருநள்ளாறு – ஜி.என்.எஸ். ராஜசேகரன்

8. நிரவி – டி.ஆர். பட்டினம் – டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்

9. மாஹே – ஏ. தினேஷன்

==================