BJP has seized power in West Bengal, defeating Mamata's Trinamool Congress, which has been in power for 15 years google
இந்தியா

West Bengal : மம்தாவின் கோட்டையை தகர்த்த பாஜக : 207 தொகுதிகளில் வெற்றி, முதன்முறையாக BJP ஆட்சி! : சாதித்த அமித் ஷா...

மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து மம்தாவின் திரிணாமூல் காங்கிரசை தோற்கடித்து, ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது பாஜக.

Kannan

இடதுசாரிகளை தகர்த்த திரிணாமூல்

மேற்கு வங்​கத்​தில் 2011ல் திரிணாமூல் முதன்​முறை​யாக ஆட்சிக்கு வந்​தது. இடது​சாரி கட்​சிகளின் கோட்​டை​யாக திகழ்ந்த பகு​தி​களைத் தகர்த்​து, மம்தா பானர்ஜி வரலாற்​றுச் சாதனை படைத்​தார்.

தொடர்ச்சியாக மூன்று தேர்தல்கள், 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த செல்வாக்கு மிக்க தலைவரான மம்தா, இந்த தேர்தலில் பாஜக அலையில் அடித்து செல்லப்பட்டார்.

மம்தா ஆட்சி மீது அதிருப்தி

15 ஆண்​டு​களாக ஆட்​சி​யில் இருந்த டிஎம்​சிக்கு எதி​ராக, ‘ஆட்​சி​யாளர் மீதான அதிருப்தி அலை' உருவானது.

2016ல் 10% இன்று 45.46%

மேற்கு வங்​கத்​தில் சுமார் 10 ஆண்​டு​களுக்கு முன் பாஜக ஒரு சிறிய கட்​சி​யாக இருந்​தது. 2016 சட்​டப்​பேரவை தேர்​தலில் 10% வாக்​கு​களை மட்​டுமே பெற்​றது.

பாஜகவின் செல்வாக்கு அதிகரிப்பு

ஆனால், 2021 தேர்​தலில் பாஜகவின் வாக்கு 38% ஆக உயர்ந்​தது. இதில் 77 தொகு​தி​களைப் பெற்ற பாஜக​வுக்கு 2024 மக்​கள​வைத் தேர்​தலில் வாக்கு விகிதம் 39% ஆக கூடியது. தற்​போதைய சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அந்த கட்சி 45.46 சதவீத வாக்​கு​களை பெற்​றிருக்​கிறது

ஊழலில் மம்தா அரசு

சில ஆண்​டு​களாக, டிஎம்சி அரசு பல முக்​கிய ஊழல் குற்றச்​சாட்​டு​களை​யும் சர்ச்​சைகளை​யும் எதிர்​கொண்​டது. இதில், பள்ளி ஆசிரியர் நியமன முறை​கேடு மற்​றும் பொது விநி​யோகத் திட்ட ஊழல் குற்​றச்​சாட்​டு​கள் முக்​கிய​மானவை.

எடுபட்ட பாஜக பிரசாரம்

ஊடுரு​வல் பிரச்​சினைக்கு தீர்வு காண்​ப​தாக பாஜக அளித்த உறுதி​மொழிக்கு பலன் கிடைத்​துள்​ளது. இந்து வாக்​காளர்​களை ஒன்று​ திரட்​டு​வ​தில் வட மாநிலங்​களைப் போல் மேற்கு வங்கத்திலும் பாஜக தீவிரம் காட்​டியது.

இந்து வாக்​காளர்​களுக்கு எதி​ராக டிஎம்சி அரசு பாகு​பாடு காட்​டு​வ​தாக வெளிப்​படை​யாகக் கூறியதும் வாக்​கு​களாக மாறி​யுள்​ளது.

பாஜகவின் இலவச வாக்குறுதிகள்

பெண் வாக்​காளர்​களைக் குறி​வைத்​து, மாதம் ரூ.3,000 நிதியுத​வி, பேருந்​துகளில் இலவசப் பயணம், கர்ப்​பிணி​களுக்கு ரூ.21,000, 124 யூனிட்​ இலவச மின்​சா​ரம்​ போன்​ற வாக்​குறு​தி​களும்​ பாஜக ஆட்​சி அமையக்​ ​காரண​மாகி விட்​டன.

207 தொகுதிகளில் பாஜக வெற்றி

மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், 207 தொகு​தி​களை பாஜக கைப்​பற்றி அபார வெற்றி பெற்​றது. திரிண​மூல் காங்​கிரசுக்கு 80 தொகு​தி​கள் கிடைத்​தன.

ஒற்றை இலக்கத்தில் காங்கிரஸ்

காங்​கிரஸ் 2, மார்க்​சிஸ்ட் 1, ஏஐஎஸ்​எப் 1 தொகு​தி​களில் வெற்றி பெற்​றன. திரிண​மூல் காங்​கிரஸில் இருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்​கிய ஹுமாயூன் கபீரின் ஏஜே​யுபி கட்சி 2 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது.

மம்தா பானர்ஜி தோல்வி

பவானிபூர் தொகு​தி​யில் முதல்​வர் மம்​தா, பாஜக மூத்த தலை​வர் சுவேந்து அதி​காரி இடையே கடும் போட்டி நில​வியது. இறு​தி​யில் மம்தா பானர்ஜி அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இறுதியில் 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். நந்​தி​கி​ராம் தொகு​தி​யிலும் சுவேந்து அதி​காரி வாகை சூடினார்.

முதல்வராகும் சுவேந்து அதிகாரி?

மேற்கு வங்கத்தில் பாஜகவின் முகமாக அறியப்படும் சுவேந்து அதிகாரி, 2வது முறையாக மம்தா பானர்ஜியை தோற்கடித்து இருக்கிறார். இவர் முதல்வராகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

===============