பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைமை புதிய மாநிலத் தலைவர்கள் நியமிது உத்தரவிட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்துகளை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அந்தமான் நிகோபார் தீவுகள் பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அனில் திவாரி நீண்ட கால அனுபவம், அந்தமான் பகுதியில் பாஜகவை மேலும் வளர்ச்சி அடையவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லவும் உதவும்.
உத்ரகண்ட் மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் மகேந்திர பட்க்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ராஜ்யசபா எம்பியாக சிறப்பாக செயல்பட்டு வரும் இவருக்கு, மக்கள் பணி செய்ய, தலைவராக நியமிக்கப்பட்டதன் வழியாக, மேலும் இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தெலங்கானா மாநில பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராமச்சந்திரராவ்,
தனது மாணவர் பருவத்தில் இருந்தே பாஜகவில் இணைந்து பயணித்து தற்போது மாநிலத் தலைவராக உயர்ந்திருப்பது ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்கிறது.
ஹிமாச்சலப் பிரதேச மாநில பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராஜீவ் பிண்டால் அனுபவம், ஹிமாச்சலப் பிரதேச மக்களின் நலனுக்கும், பாஜகவின் வளர்ச்சிக்கும் உதவும் என்று நம்புகிறேன்.மகாராஷ்டிர மாநில அரசியல் களத்தை நன்கு அறிந்த ரவி பாஜகவில் ஒரு காரியகர்த்தாவாக தனது பயணத்தைத் தொடங்கி, மாநிலத் தலைவராக உயர்ந்திருக்கிறார்.
ஆந்திர மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிவிஎன் மாதவ்க்கு
எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மிசோரம் மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பெய்ச்சுவா (DrBeichhua) வுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரி மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள ராமலிங்கம் , நரேந்திர மோடியின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு பாலமாக இருப்பார். நீண்டகாலமாக மக்களுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கும் அவர் தற்போது மேலும் சிறப்பாக பணியாற்றுவார்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.