BJP promised to provide Rs 3,000 per month to women and youth if it comes to power in West Bengal google
இந்தியா

West Bengal : மகளிர், இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 : 1 கோடி வேலை, அரசு பணியில் பெண்களுக்கு 33% : பாஜக வாக்குறுதி

மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு மாதம் 3,000 வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

Kannan

மேற்கு வங்க தேர்தல்

மேற்கு வங்க மாநிலத்தில், வரும் 23 மற்றும் 29ம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஆட்சியை தக்கவைக்க திரிணாமூல் தீவிரம்

மூன்று முறை ஆட்சி பொறுப்பில் இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணாமூல் காங்கிரஸ் 4வது முறை ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் களப்பணியாற்றி வருகிறது.

ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு

எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்கும் மனநிலையில், அதற்கான வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டாலும், பெரிய அளவில் வெற்றிக்கான வாய்ப்புகள் அவர்களுக்கு இல்லை.

பாஜக தேர்தல் அறிக்கை

இந்தநிலையில், மேற்கு வங்கத்துக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டு இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் :

* பாஜக ஆட்சி அமைந்ததும் ஆறு மாத காலத்தில் மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம்

* பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்

* ஊடுருவலில் ஈடுபடுவோர் மீது சமரசமற்ற நடவடிக்கை

* மேற்கு வங்கத்தில் பசு கடத்தல் தடுக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

* மேற்கு வங்கத்தில் பாஜக அரசின் அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்படும். இதில் ஆயுஷ்மான் பாரத் திட்டமும் அடங்கும்.

* ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ)

* அரசியல் வன்முறைகள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை

* சட்டம் - ஒழுங்கு உறுதி செய்யப்படும். ஊழலற்ற ஆட்சி அமைப்போம்

* வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000

* 5 ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

* மாநில அரசு பணிகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு

* மகளிருக்கு பாதுகாப்பு வழங்க பெண்கள் காவல்துறை உருவாக்கப்படும்

* தேயிலை தோட்டங்கள் மீட்டு எடுக்கப்படும்

* வந்தே மாதரம் அருங்காட்சியகம் உருவாக்கப்படும்

==================================