வங்கதேச பொது தேர்தல்
வங்கதேசதில் நடந்த பொதுத் தேர்தலில் மொத்தம் 59.44 சதவீத வாக்குகள் பதிவாகிஇருந்தது.
மொத்தமுள்ள 299 இடங்களில், வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) தலைமையிலான கூட்டணி 212 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் இருந்த சூழலில் ,ஜமாத் இ இஸ்லாமி தலைமையிலான கூட்டணி 70 இடங்களில் வெற்றி பெறும் சூழலில் இருந்தது .
பிஎன்பி அமோக வெற்றி
பிஎன்பி கட்சி 181 இடங்களில் வெற்றி பெற்ற பெரும்பான்மையை கைப்பற்றியதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தாரிக் ரஹ்மானுக்கு குவியும் பாராட்டு
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துகள் பல தரப்பிலும் இருந்தும் பாராட்டுக்குள் குவிந்து வருகின்றன.
வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள், டாக்காவில் உள்ள பிஎன்பி தலைமையகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பிரதமர் மோடி வாழ்த்து
எக்ஸ் தளத்தில் பதிவிட்டு குறிப்பிட்டுள்ள மோடி , ‘‘வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் தீர்க்கமான வெற்றியை நோக்கி மக்களை அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் இந்த வெற்றி, வங்கதேச மக்கள் உங்கள் தலைமை மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் ஆதரவு -இரு தரப்பு உறவு வலுப்பெறும்
ஜனநாயக, முற்போக்குடன் செயல்படும் வங்கதேசத்திற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும், இந்த நட்பு நமது பன்முக உறவுகளை வலுப்படுத்தவும், நமது வளர்ச்சி முன்னேற்றத்திற்கும் உடனிருக்கும் என்றும் தெரிவித்தார்.
மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து
இந்தியாவும் வங்கதேசமும் வரலாறு, மொழி, கலச்சாரம் மற்றும் பல பொதுவான பண்புகளில் ஆழமாக வேரூன்றிய பிணைப்புகளை பகிர்ந்து கொள்கின்ற ஒன்றாகவே இருந்து வருகிறோம் .அந்த வகையில் இந்தியா என்றும் உடன் நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேச தேசிய கட்சியின் மறுவாழ்த்து
க்கட்சியின் 2026 தேர்தலுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் நஸ்ரூல் இஸ்லாம் கான், ‘‘எங்கள் தலைவர் தாரிக் ரஹ்மானை வாழ்த்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தலைவர் தாரிக் ரஹ்மான் தலைமையில் இரு நாடுகளுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான உறவு பலப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.