5 நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த சுற்றுப் பயணம் அமைந்து இருக்கிறது.
நல்லுறவை மேம்படுத்த நடவடிக்கை :
கானா, டிரினி்ட் டுபாகோ, அர்ஜென்டினா நாடுகளுக்கு சென்ற மோடி, அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நாடுகளுக்கும், இந்தியாவுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக இந்தப் பயணம் இருந்தது.
இதைத்தொடர்ந்து, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அங்கு சென்றார்.
மோடிக்கு சிறப்பான வரவேற்பு :
ரியோ டி ஜெனிரோவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு வாழும் இந்தியர்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து அந்நாட்டு அதிபரை சந்தித்த மோடி, சர்வதேச விவகாரங்கள், இருதரப்பு நல்லுறவு குறித்து விவாதித்தார்.
இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து பிரேசில் நாட்டில் வசிப்பவர்கள்
”ஆபரேஷன் சிந்தூர்” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாசார நடனத்தை நடத்தினர். இதை பிரதமர் வெகுவாக ரசித்தார்.
பிரிக்ஸ் உச்சி மாநாடு :
பின்னர் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ’17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன். ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார். பிரேசில் பயணம் முடிந்ததும் இறுதியாக நமீபியா நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.
=====