Breakfast scheme launched in Telangana: Emphasis on millet-based foods.  google
இந்தியா

”தெலுங்கானாவில் அமலுக்கு வந்தது காலை உணவு திட்டம்” சிறுதானியம் சார்ந்த உணவுகளுக்கு முக்கியத்துவம்..!

இந்த காலை உணவு திட்டமானது திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாணவர்களுக்கு பல்வேறு வகையான உணவுகளை சுழற்சி முறையில் வழங்க உள்ளது

Rohini

தெலுங்கானாவில் காலை உணவு திட்டம் தொடக்கம்

தெலங்கானாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டமானது அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிறுதானிய இட்லி, ராகி கூழ் மற்றும் பால் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

திங்கள் முதல் சனிவரை காலை உணவு விநியோகம்

இந்தக் காலை உணவுத் திட்டத்தின் கீழ், திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாணவர்களுக்குப் பல்வேறு வகையான உணவுகள் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம்

தெலுங்கானாவில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தில் சிறுதானியங்கள் சார்ந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட இருப்பதாக அம்மாநிஉல அரசு தெரிவித்துள்ளது .அந்த வகையில் உணவுப் பட்டியலில் சிறுதானிய இட்லி மற்றும் ராகி கூழ், பால், தோசை, பூரி, போண்டா போன்ற உணவுகள் இடம்பெற்றுள்ளன

பட்டியலில் இடம்பெற்றுள்ள உணவுகள்

இந்த காலை உணவு திட்டத்தில் சிறுதானியங்கள் சார்ந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி உணவுப் பட்டியலில் சிறுதானிய இட்லி மற்றும் ராகி கூழ், பால், தோசை, பூரி, போண்டா போன்ற உணவுகள் இடம்பெற்றுள்ளன

திட்டதை தொடங்கி வைத்து அமைச்சர் கூறியதாவது

இந்தத் திட்டத்தை ஹைதராபாத்தில் தொடங்கி வைத்த போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் கூறுகையில், “எந்தவொரு குழந்தையும் வெறும் வயிற்றுடன் பள்ளிக்குச் செல்வதை தவிர்க்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்

மாணவர்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதே நோக்கம்

மாணவர்கள் அரசு கல்வி நிறுவனங்களிலேயே காலை மற்றும் மதிய உணவை உட்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். மாணவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்தச் சத்தான உணவு வழங்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

======================