Indian Border Security Force - BSF Constable Recruitment 2025 Notification ANI
இந்தியா

விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு : BSF-ல் உடனடியாக வேலை

BSF Constable Recruitment 2025 Notification : இந்திய எல்லை பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்காக 241 காலி பணியிடங்கள் எழுத்து தேர்வின்றி நிரப்பப்பட உள்ளன.

Kannan

இந்திய எல்லை பாதுகாப்புப் படை :

BSF Constable Recruitment 2025 Notification : இந்திய ராணுவத்தின் துணை படைப்பிரிவாக எல்லை பாதுகாப்பு படை செயல்பட்டு வருகிறது. எல்லையை பாதுகாக்கும் பணியில் இதில் பணி புரியும் வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போதும், தேர்தல் சமயத்திலும் இவர்கள் ஆற்றும் பணி அளப்பரியது.

241 காலி பணியிடங்கள் - அறிவிப்பு வெளியீடு :

இந்தநிலையில், எல்லை பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பொதுப்பணி காவலர்கள் பிரிவில் 241 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

பெண்களுக்கும் வேலைவாய்ப்பு :

இதன்மூலம் 128 ஆண்கள், 113 பெண்களுக்கு எல்லை பாதுகாப்பு படை பிரிவில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். விளையாட்டுத் துறைக்கான பணியிடங்கள் என்பதால், இறகு பந்து, கூடை பந்து, குத்துச் சண்டை, கால் பந்து, ஜூடோ, நீச்சல், துப்பாக்கி சுடுதல், கபாடி, உள்ளிட்ட 30 விளையாட்டு பிரிவுகளில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSFல் பணியிடங்கள் - தகுதி :

எல்லை பாதுகாப்பு பணியில் சேர(BSF Constable Recruitment 2025 Qualification) 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடி இருக்க வேண்டும் அல்லது பதக்கம் வென்றிருக்க வேண்டும். தேசிய அளவிலான விளையாட்டில், சாம்பியன்ஷிப்களில், தேசிய ஓபன் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் கண்டிப்பாக பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

இது தவிர, 21 ஆகஸ்ட் 2023 முதல் 20 ஆகஸ்ட் 2025 வரை நடைபெற்ற ஏதேனும் ஜூனியர் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றிருக்க வேண்டும். குழு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

BSF பணியிடம் - எழுத்து தேர்வு கிடையாது :

விண்ணப்பதாரர்களின் வயது 1 ஆகஸ்ட் 2025ன் போது 18 முதல் 23 வயதுக்குள்(BSF Constable Recruitment Age Limit) இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெற்ற பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். இதற்கு எழுத்து தேர்வு கிடையாது. ஆவணங்கள் சரிபார்ப்பு, பிஎஸ்டி, தகுதிப் பட்டியல், விரிவான மருத்துவத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தேர்வு நடைபெறும்.

BSFல் பணி - ரூ.69,000 ஊதியம் :

குறைந்தப் பட்சமாக ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை ஊதியம் கிடைக்கும்(BSF Constable Salary 2025). இதுபோக அரசின் பல்வேறு சலுகைகளும், பிற சம்பளப் படிகளின் பலன்களும் கிடைக்கும். விருப்பமும், தகுதியும் உடைய நபர்கள் எல்லை பாதுகாப்புப் படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://rectt.bsf.gov.in/ மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

=====