Cannot provide water to Tamil Nadu: CM Shivakumar rules out possibility. google
இந்தியா

தமிழ்நாட்டிற்கு ”தண்ணீர் தர இயலாது” : முதல்வர் சிவக்குமார் கைவிரிப்பு : முதல்வர் விஜயிடம் தெரிவித்து விட்டதாக தகவல்..

15 நாட்களுக்கு தண்ணீர் விடுவிக்குமாறு தமிழகம் கோரியிருந்த நிலையில், கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் இவ்வாறாக தெரிவித்துள்ளார்

Rohini

தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது , முதல்வர் சிவக்குமார் திட்டவட்டம்

டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழகத்தின் அதிகாரிகள் காணொலி காட்சி மூலமாக பங்கேற்று தண்ணிர் திறப்பு குறித்து விவாதங்களை மேமேற்கொள்ப்பட்டது

அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா காவிரியில் தமிழகத்துக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் , இதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் இந்த பரிந்துரையின் படி தமிழகத்திற்கு தன்ணீர் தர இயலாது என்று மறுத்துள்ளார்

கர்நாடக நீர்நிலைகளை பார்வையிட தமிழக முதல்வருக்கு அழைப்பு

காவிரி விவகாரம் தொடர்பாக தொலைபேசி மூலம் முதல்வர் விஜய் என்னிடம் பேசினார் என்று கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமார் தெரிவித்திருகிறார்

மேலும் கர்நாடகாவின் நீர் நிலைகளை பார்வையிட தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

மேகதாது பகுதி உள்ளிட்ட கர்நாடகாவின் நீர் நிலைகளை பார்வையிட முதல்வர் விஜய்காக ஹெலிகாப்டர் தயாராக உள்ளதாகவும் , முதல்வர் விஜய்க்கு விளக்கமளிப்பதற்காக வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவும் தயாராக இருப்பதாக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருக்கிறார்

இதற்கு முன்னர் மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய நீர்வளத்துறை தெரிவித்திருந்தது

மத்திய நீர்வளத்துறை இது குறித்து தெரிவித்திருந்தது

மேகேதாட்டுவில் கர்நாடகா புதிய அணை கட்டும் முயற்சியை மேற்கொள்வதற்கு, தமிழகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக ராஜ்யசபாவில் பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், ‘‘காவிரி நதியின் குறுக்கே கட்டுமானத்தை மேற்கொள்ள கர்நாடகா அரசு தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலை பெற வேண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை.

காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில், மாநில எல்லைகளுக்குள் நீரைப் பயன்படுத்தவும், அதன் பயனை அனுபவிக்கவும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேகதாது அணை தொடர்பாக, கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை, காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவு மற்றும் மத்திய நீர்வள ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு திட்ட அதிகாரிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாகவும்” அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்

மத்திய அரசின் அறிவிப்பு , பிரதமருக்கு கடிதம்

மத்திய அரசின் இந்த அறிவிப்பு வேதனை அளிப்பதாக தமிழக முதல்வர் விஜய் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார் , இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் நிலையில் , கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாரின் இந்த பதில் தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது

===========================