Cauvery Mekedatu issue: Supreme Court to take up the case for hearing on the 13th google
இந்தியா

காவிரி, மேகேதாட்டு விவகாரம் : 13ம்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்கிறது உச்சநீதிமன்றம், நீர் திறக்க கோரி வலியுறுத்தல்!

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க கோரி தமிழ்நாட்டின் வழக்கு விசாரணையை வரும் 13 ம் தேது எடுத்து கொள்வதாக உச்சநீதிமன்றம் உறுதியளித்துள்ளது.

Rohini

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீர் திறக்க கோரிய வழக்கு

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுற்கு உரிய நீரை திறந்துவிட கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநிதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசின் வழக்கு, 13ல் விசாரணை

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய உரிய நீரை கர்நாடகம் திறந்து விட கோரி தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது ,

வழக்கமாக தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய தண்ணிரை திறக்க வலியுறுத்தி அதனை விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுவானது தாக்கல் செய்யப்படிருந்தது , இந்த வழகின் விசாரணையை வரும் 13 ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக உச்சநீதிமன்றம் உறுதியளித்துள்ளது

வழக்கின் பின்னணி என்ன?

தமிழ்நாடு அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு அளிக்கத் தவறிவிட்டது.

காவிரி ஆணைய உத்தரவுக்கு பிறகு பிலிகுண்டுலுவுக்கு வெறும் 550 கன அடி மட்டுமே தண்ணீர் வருகிறது , என்று குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கானது தொடரப்பட்டிருந்தது

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்;

28.07.2026 அன்று நடைபெற்ற 139-வது கூட்டத்தில், காவிரி நீரை  முறைப்படுத்தும் குழு காவிரி படுகையின் நீரியல்-வானிலை சூழலை ஆய்வு செய்து, 29.07.2026 (காலை 8.00 மணி) முதல் அடுத்த 15 நாட்களுக்கு (29.07.2026 முதல் 12.08.2026 வரை) பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3500 கன அடி (cusecs) வீதம் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு

கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. 30.07.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது (அவசர) கூட்டத்திலும் காவிரி படுகையின் நீரியல்-வானிலை நிலவரம் ஆய்வு செய்யப்பட்டு,

குழுவின் முடிவு உறுதி செய்யப்பட்டது.என்று இவ்வாறு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது

============================