மக்கள் தொகை கணக்கெடுப்பு
2027ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும். சில மாநிலங்களில் முன்னதாகவே துவங்க உள்ளது.
முதல் கட்ட கணக்கெடுப்பு
முதல் கட்டத்தில் வீடுகள், அவற்றில் வசிப்பவர்கள், வீடுகளில் உள்ள அடிப்படை வசதிகள் ஆகியவை கணக்கெடுக்கப்படும். இது, 'வீட்டுப் பட்டியல் தயாரிக்கும் கட்டம்' என்று அழைக்கப்படுகிறது. இதில் வீடுகள் மற்றும் அவற்றில் உள்ள வசதிகள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்படும்.
2ம் கட்ட கணக்கெடுப்பு
இரண்டாவது கட்டமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி பிப்ரவரி இறுதி வரை நடைபெறும்.
லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களிலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்படுகிறது
சாதிவாரி கணக்கெடுப்பு
இதில் சாதிவாரியான கணக்கெடுப்பும் இடம்பெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் 2027ம் ஆண்டில் வெளியாகக் கூடும்.
இந்த தரவுகள், அரசுத் திட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு முதல் இந்தியாவின் அரசியல் சூழல் வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
மகளிர் இட ஒதுக்கீடு சட்டம்
2023ல் நாடாளுமன்றத்தில் 'நாரி சக்தி வந்தன்’ எனும் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேறியது. இ
ச்சட்டம், நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. எனினும், இச்சட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தொகுதி மறுவரையறை பணிகள்
மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் முழுமையாகக் கிடைத்த பின்னரே இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, அரசு ‘தொகுதி மறுவரையறை’ பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் போது, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் தோற்றமே முழுமையாக மாறிவிடும் வாய்ப்புகள் உள்ளன.
அவற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பெண்களுக்கு அதிக வாய்ப்பு
2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், வெறும் 74 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த எண்ணிக்கை, பெண்களுக்கான ஒதுக்கீடு அமலான பின் நாடாளுமன்றத்தில் 150ஐ நிச்சயம் தாண்டும்.
தொகுதி மறுவரையறைக்குப் பிறகு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்புகள் உள்ளன.
இது நிழ்ந்தால், மிகப்பெரிய அரசியல் திருப்பமும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
தொகுதி மறுவரையறை நடந்தால், தங்களுக்குக்கு பிரதிநித்துவம் குறையும் என தென் மாநில அரசியல் கட்சிகள் அஞ்சுகின்றன. மக்கள்தொகை குறைந்து இருப்பதாக இதற்கு முக்கிய காரணம்.
வட மாநிலங்களுக்கு ஜாக்பாட்
மக்கள் தொகை அதிகமாக இருக்கும் வட மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் கூடுதல் பிரதிநிதிகளை பெறும். மக்கள் தொகையை முறையாக கட்டப்படுத்திய தென் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் குறையக் கூடும்
சாதிவாரி கணக்கெடுப்பு இருக்குமா?
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரியான விவரங்களும் கணக்கெடுக்கப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.
நாட்டின் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்களிடமிருந்து நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்த ஒரு கோரிக்கையாக இது இருக்கிறது.
இந்த கணக்கெடுப்பில் சாதி வாரியான விவரங்கள் கணக்கெடுக்கப்படும் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பாக எதையும் குறிப்பிடவில்லை.
இது, அரசு சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தாமல் விட்டுவிடுமோ என்ற சந்தேகங்களை எழுப்பியது. இருப்பினும், தற்போதைய சூழல் இன்னும் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.
முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு
இதற்கு முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளில், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் மதச் சிறுபான்மையினர் ஆகியோரின் விவரங்கள் மட்டுமே கணக்கெடுக்கப்பட்டன.
கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கி மக்கள் இடப்பெயர்ச்சி அதிகரித்துள்ளது.
இது நகர்ப்புறக் கட்டமைப்புகளின் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி, நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது.
நகர்ப்புறங்களில் அதிகம் பேர்
மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில், வீடுகளின் எண்ணிக்கை, அவற்றில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை, அந்த வீடுகளின் நிலை மற்றும் பிற தகவல்கள் ஆகியவை பதிவு செய்யப்படும்.
இது நகரங்கள் மற்றும் கிராமங்களின் தற்போதைய நிலை குறித்த துல்லியமான தரவுகளை வழங்கும். இத்தரவுகள் நலத்திட்ட மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.
சிறப்பு மேம்பாட்டு திட்டங்கள்
இதன் வாயிலாக, நகரங்கள் மற்றும் கிராமங்களின் சிறப்பான மேம்பாட்டிற்கான பொருத்தமான திட்டங்களை வகுக்கும் சூழலும் எதிர்பார்க்கப்படுகிறது.
================================