ஒவ்வொரு 10 ஆண்டிற்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வந்தது.
ஆனால், கோவிட் பெருந்தொற்று காரணமாக 2021ம் ஆண்டு இந்தக் கணக்கெடுப்பு நடைபெறவில்லை.
அதற்கு முன்பு கடைசியாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
இந்தநிலையில், 2027ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
2028ம் ஆண்டிற்கும் இந்தப் பணிகளை முடிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்பு, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 34 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் 1.3 லட்சம் அதிகாரிகளைக் கொண்டு டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
இரண்டு கட்டங்களாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
------