மாவோ தளபதி சுட்டுக்கொலை
Naxal Free India Central Government Mission 2026 : மாவோயிஸ்டு அமைப்பின் மிக முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த மத்வி ஹித்மா ஆந்திராவில் பாதுகாப்பு படையினரால் வீழ்த்தப்பட்டார். மாவோக்கள் நடத்திய முக்கியமான தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட இவரது வீழ்ச்சி, மாவோயிஸ்டு அமைப்பை நிலை குலையச் செய்திருக்கிறது. 2026க்குள் நக்சலிசம் இல்லாத இந்தியா என்ற மோடி அரசின் இலக்கை நோக்கி வேகமான பயணத்தை முன்னெடுத்து இருக்கிறது.
43 வயதான மாவோயிஸ்ட் தளபதி மத்வி ஹித்மா தர்பா பள்ளத்தாக்கு படுகொலை மற்றும் சுக்மா தாக்குதலில் பெரிய பங்கு வகித்தவர்.
மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந் நடத்தியது தாக்குதல்களுக்கு இவர் தான் முளை.
நக்சல் ஒழிப்பில் முனைப்பு
நக்சல் ஒழிப்பு பணியை மத்திய அரசு, மாநிலங்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் பாதுகாப்பு படையினர் தொடர்ச்சியாக தேடுதல் வேட்டை நடத்தி, அவர்களின் நடவடிக்கையை ஒடுக்கி வருகின்றனர்.
மத்வி ஹித்மா வீழ்த்தப்பட்டது. 'நினைவுச் சின்ன வெற்றி' என்று ஆந்திர காவல்துறை அழைக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் பிறந்த ஹித்மா 10 வயதில், கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்து, பின்னர் மாவோயிஸ்டாக உருவெடுத்தார். பல மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல்களை திட்டமிட்டு அரங்கேற்றியது இவர் தான்.
மாவோயிஸ்டு தளபதி ஹித்மா
2010ல் தந்தேவாடா பகுதியில் CRPF வீரர்கள் 76 பேர் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் நின்றவர் ஹித்மா. சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் இவருக்கு தொடர்பு இருக்கிறது.
சிஆர்பிஎஃப் கோப்ரா மற்றும் மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி) போன்றவை ஹித்மா குறித்து தொடர் தேடுதலை மேற்கொண்டு, உளவுத்துறை மூலம் முக்கிய தகவல்களை பெற்றன. ஆந்திராவில் நடந்த ஒரு மோதலில் ஹித்மாவின் மனைவி மற்ற போராளிகளுடன் கொல்லப்பட்டார்.
படைகளுக்கு வெற்றி
ஹித்மா கொல்லப்பட்டது மாவோயிஸ்டுகளின் நம்பிக்கையை சீர்குலைத்து இருக்கிறது. இது பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. உளவியல் ரீதியாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.
நக்சலிசம் - காங்கிரசின் தவறான அணுகுமுறை
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, நக்சலைட்டுகளுக்கு எதிரான போராட்டத்தை மென்மையாக்கும் நிலைப்பாடுகளை மட்டுமே எடுத்தது. இது எந்த பயனையும் கொடுக்கவில்லை. ஆனால் மோடி அரசு, இதன் காரணமாக பசவராஜு, சுதாகர், பாஸ்கர், மத்வி ஹித்மா போன்ற முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் வீழ்த்தப்பட்டனர். 2014ல் மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற போது, 126 ஆக இருந்த நக்சல் பாதிப்பு மாவட்டங்கள், 2025ல் வெறும் 6 ஆக சரிந்து விட்டன.
உறுதியான முடிவுடன் பாஜக
காங்கிரசை விட பாஜக அரசின் அணுகுமுறை தெளிவாக, உறுதியாக சரியான வழியில் செல்கிறது. இதன்மூலம் 2026ல் இந்தியா நக்சல் இல்லாத நாடாக மாறப் போகிறது. காங்கிரஸ் செழிக்க அனுமதித்த நக்சல் வளர்ச்சி, இப்போது முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது.
மாவோ தலைவர்கள் சரண்
பாஜக அரசின் சீரிய நடவடிக்கை காரணமாக, தலைக்கு பல கோடி ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டு இருந்த மாவோயிஸ்டு தலைவர்கள், நம்பலா,
கேசவ் ராவ், கௌதம், அர்ஜுன், வேணுகோபால் ராவ், ரனிதா உள்ளிட்டோர் வன்முறையை கைவிட்டு சமூக நீரோட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள்.
பிர்சா முண்டாவின் வீரம், கண்ணியம் இந்தியாவின் வளர்ச்சியில் பழங்குடி சமூகங்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தி இருக்கிறது. ஆனால், மத்வி ஹித்மா போன்றோர் அதை சீர்குலைத்தார்கள். அவர் அழிக்கப்பட்டது, "சிவப்பு பயங்கரவாதத்தை" ஒழிப்பதற்கான தெளிவான நடவடிக்கை தான்.
2026க்குள் நக்சலிசம் இல்லாத இந்தியா
2026 மார்ச் 31க்குள் நக்சலிசத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இலக்கு. அதற்கு கிடைத்து இருக்கும் பயன் தான், இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான போரின் இறுதி கட்ட நிகழ்வுகள், வலுவானதாக இருக்கும்.
சரண் அல்லது அழிப்பு
நக்சலிசத்தை காதல் மயமாக்கிய காங்கிரசை போல் அல்லாமல், பாஜகவின் நிலைப்பாடு ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக இருக்கிறது.
மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது இனி பலன் தராது. ஒன்று ஆயுதங்களை கீழே போட வேண்டும் அல்லது வலிமையும் எதிர்த்து அழிக்க வேண்டும்.
பழங்குடியின மேம்பாடு
வன்முறையை எதிர்த்துப் போராடும் போதும், மக்கள் மீதான கருணையின் போதும் மோடி அரசாங்கம் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளவில்லை. நீண்ட கால புறக்கணிப்பு மற்றும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு கண்ணியமாக வாழ்க்கை வழங்குவதன் மூலம், நக்சல் அமைப்பில் இருந்து அவர்கள் பிரிக்கப்பட்டார்கள்.
அடுக்கடுக்கான திட்டங்கள்
பழங்குடி இளைஞர்களுக்கு மறுவாழ்வு, பழங்குடியின பகுதிகளில் வளர்ச்சிக்கு உத்தரவாதம், 14,618 கி.மீ. சாலைகள், 10,505 மொபைல் கோபுரங்கள், தகவல் தொடர்புடன் இணைக்கப்பட்ட 35 நக்சல் பாதிப்பு மாவட்டங்கள், 1,007 வங்கிக் கிளைகள், 937 ATMகள், 48 தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ITIகள்), 61 திறன் மேம்பாட்டு மையங்கள் (SDCகள்), 178 ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகள் போன்ற பணிகள் புதிய விடியலை நோக்கிய தெளிவான பயணத்தை பாதை அமைத்து விட்டன.
மோடி, அமித்ஷா மகத்தான சாதனை
இனி எந்த பிரிவினைவாத அமைப்புகளாலும் பழங்குடியினரை தவறாக வழிக்கு திருப்பவே முடியாது. இதுதான் மோடி தலைமை, அமித் ஷா வழிகாட்டுதலுடன் கூடிய மத்திய பாஜக அரசின் மகத்தான சாதனை
=====