central BJP government plans to pass key bills during the Parliament's monsoon session google
இந்தியா

Parliament Session : மழைக்கால கூட்டத்தொடர் : முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பாஜக வியூகம்! : 3 ல் 2 பங்கு ஆதரவு தேவை...

அடுத்த மாதம் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டு உள்ளது.

Kannan

முக்கிய மசோதாக்கள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது. கடந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற முடியாத மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.

மிக முக்கிய மசோதாக்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ராஜ்யசபா ஆளுங்கட்சி 150 உறுப்பினர்கள்

மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி பலம் 150ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 13 இடங்கள் இருந்தால் அரசமைப்பு சாசன மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான 3இல் 2 பங்கு பெரும்பான்மை ஆளுங் கூட்டணிக்கு கிடைத்து விடும்.

மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 3 இடங்களிலும் வெற்றி கிடைக்கும் என்பதால் இந்த எண்ணிக்கை 153 ஆக உயரும்.

ஆனால் இன்னும் சில மாதங்களில் உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் சமாஜ்வாதிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பதால் அங்கு பாஜகவின் எண்ணிக்கை குறையும்.

எனவே, 163 என்ற மேஜிக் நம்பரை எட்ட இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் எனத் தெரிகிறது.

மக்களவையில் ஆளுங்கட்சி 319 உறுப்பினர்கள்

மறுமுனையில் மக்களவையில் ஏற்கெனவே உள்ள 293என்ற பலத்தோடு திரிணாமுல், உத்தவ் சிவசேனாவிலிருந்து பிரிந்து வருபவர்கள் எண்ணிக்கையை சேர்த்தால் ஆளும் கூட்டணியின் பலம் 319 ஆக மட்டுமே உள்ளது.

3 ல் 2 பங்கிற்கு 363 தேவை

இங்கு 3இல் 2 பங்கு பெரும்பான்மைக்கு தேவைப்படும் எண் 363 ஆக உள்ளது. இதற்கு 44 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

எனவே மாநிலங்களவையை விட மக்களவையில் 3 ல் 2 பங்கு ஆதரவைப் பெற ஆளும் கூட்டணி போராட வேண்டியிருக்கும்.

ஒய்எஸ்ஆர், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளின் ஆதரவு கிடைத்தாலும் கூட 3 ல் 2 பங்கு இப்போதோக்கு சவால் தான்.

ஆளும் கட்சியின் வியூகம் என்ன?

இதுபோன்ற சூழலில் தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு எதுபோன்ற நகர்வுகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

=======================