நீதிபதிகளின் நியமன உத்தரவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியனமத்திற்க்கு குடியரசு தலைவர் ஒப்புதலானது வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கையானது 37 ஆக உயருகிறது
உச்ச நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதிதாக பங்கேற்க்கும் நீதிபதிகள்
புதிய உச்சநீமன்ற நீதிபதியாக பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா,
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அருண் ஃபலீ மற்றும் மூத்த வழக்குரைஞர் வெங்கிட சுப்ரமணி மோகனா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக பங்கேற்கின்றனர்
இது குறித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால், இந்திய அரசியலமைப்பின் 124(2)-வது பிரிவின் கீழ், 4 உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளையும், மூத்த வழக்குரைஞர் வி. மோகனாவையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
உயரும் நீதிபதிகளின் எண்ணிக்கை
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மற்றும் 33 நீதிபதிகள் என்ற அளவில் நீதிபதிகளின் எண்ணிக்கை இருந்த நிலையில், இந்த எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை கடந்த 5-ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
ஓய்வு பெறும் நீதிபதிகள்
நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி ஜூன் 28-ஆம் தேதியும், நீதிபதி பங்கஜ் மித்தல் ஜூன் 16-ஆம்தேதியும் ஒய்வு பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
==============