Central government clarified that, Sanchar Saathi Mobile app is not mandatory, discretion of the users ANI
இந்தியா

’சஞ்சார் சாத்தி’ கட்டாயமில்லை: பயனாளர் விருப்பம், அரசு விளக்கம்

Sanchar Saathi Mobile App Not Mandatory : சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமாக்கப்படவில்லை, அதை பயன்படுத்துவது பயனர்களின் விருப்பம் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Kannan

’சஞ்சார் சாத்தி’ செயலி

Sanchar Saathi Mobile App Not Mandatory : சைபர் பாதுகாப்பு செயலியாக ’சஞ்சார் சாத்தி’ -யை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை முன்கூட்டியே நிறுவுமாறு செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தர விடப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றன. அதன்படி இனி சந்திக்கு வரும் செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இடம் பெற்று இருக்கும் என்றும் கூறப்பட்டது.

பயனர்களின் தரவுப் பாதுகாப்பு

மத்திய அரசின் இந்த உத்தரவு, பயனர்களின் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு குறித்து சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரதை பிரச்சினையாக்கி எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கின.

மத்திய அரசு விளக்கம்

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா உரிய விளக்கதை அளித்து இருக்கிறார். நாடாளுமன்ற வளாகத்தின் வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படுத்த பிரச்னைகள் ஏதும் இல்லாதபோது இதுபோல் ஏதோ ஒன்றை உருவாக்குகிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு உதவுவதும் அவர்களது பாதுகாப்பின் மீது கவனம் கொள்வதும் மட்டுமே நமது கடமை.

பயனர்களின் பாதுகாப்பு முக்கியம்

சஞ்சார் சாத்தி செயலி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதுவரை 20 கோடிக்கும் மேற்பட்டோர் அந்தச் செயலியைத் தரவிறக்கியுள்ளார்கள். 1.75 கோடி மோசடியான கைப்பேசி இணைப்புகளைக் கண்டறிய இந்தச் செயலி உதவியுள்ளது. 20 லட்சம் தொலைந்துபோன கைப்பேசிகளைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சாத்தி செயலி உளவு பார்க்காது

7.5 லட்சம் கைப்பேசிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சஞ்சார் சாத்தி செயலி மூலம் சாத்தியமாகி இருக்கிறது. இது ஒட்டுக் கேட்பதையோ அழைப்புகளை உளவு பார்ப்பதையோ செய்வதில்லை. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தச் செயலியை நிறுவிக் கொள்ளவோ, நீக்கிவிடவோ முடியும்.

பயனர்களின் உரிமைக்கு முன்னுரிமை

சஞ்சார் சாத்தி செயலி வேண்டாம் என்றால் நீங்கள் அதை அழித்து விடலாம். இது முழுக்க முழுக்க நுகர்வோரின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியைப் பற்றிய தவறான புரிதல்களை நான் மாற்ற விரும்புகிறேன். உதவி தேவைப்படும் அனைவருக்கும் இந்தச் செயலியை அறிமுகப்படுத்த வேண்டும்.

தனிப்பட்டை உரிமையில் தலையீடு இல்லை

அவர்கள் அதைக் கைப்பேசியில் வைத்துக் கொள்வதும் நீக்கிவிடுவதும் அவர்களது தனிப்பட்ட உரிமை. எந்தச் செயலியைப் போல இதையும் கைப்பேசிகளில் இருந்து அழிக்க முடியும். இதனால் தனியுரிமைக்கு பாதிப்பு ஏற்படாது” என்று ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம் அளித்தார்.

====================