Central Government has imposed a temporary ban on the Telegram app until the NEET re-examination concludes. google
இந்தியா

"Telegram app" இந்தியாவில் தற்காலிக தடை : நீட் தேர்வு முடியும் வரை முடக்கம் : மத்திய அரசு அதிரடி நடவடிக்கை...!

நீட் மறு நுழைவுத் தேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்து இருக்கிறது.

Kannan

நீட் நுழைவுத்தேர்வு

மருத்துவ இளங்கலை படிப்பில் சேர, நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம். இந்த தேர்தவில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒருவரின் மருத்துவராகும் கனவு நிறைவேறும்.

21ம்தேதி நீட் மறுதேர்வு

மே மாதம் 3ம் தேதி நடைபெற நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தேர்வு ரத்து செய்த தேசிய தேர்வுகள் முகமை, வரும் 21ம் தேதி மறுதேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.

டெலிகிராம் மூலம் வினாத்தாள் கசிவு

மே 3ம் தேதிக்கு முன்னதாக, நீட் வினாத்தாள் டெலிகிராம் செயலி மூலம் கசிந்தது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மறு நுழைவுத் தேர்வை மிகவும் பாதுகாப்பாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகளுக்கு எதிரான ஒரு பெரிய அதிரடி நடவடிக்கையாக, மத்திய அரசு நாடு முழுவதும் டெலிகிராம் (Telegram) குறுஞ்செயலிக்கு அதிகாரப்பூர்வமாக தற்காலிகத் தடை விதித்துள்ளது.

தேசிய தேர்வு முகமை பரிந்துரை

வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21, 2026) நடைபெறவிருக்கும் நீட் (NEET UG 2026) மறுதேர்வின் போது வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு மோசடி கும்பல்களின் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, தேசிய தேர்வு முகமையின் (NTA) நேரடிப் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள் அமல்

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் பிரிவு 69A-ன் கீழ் உள்ள அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இந்த கடுமையான மற்றும் காலவரையறைக்கு உட்பட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

இரண்டு உத்தரவுகள் பிறப்பிப்பு

மத்திய அரசின் இந்த புதிய தலையீட்டில் இரண்டு முக்கியமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, நீட் மறுதேர்வுக்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களை உள்ளடக்கிய வகையில் வரும் ஜூன் 22, 2026 வரை இந்தியாவில் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்துவதற்கான பொதுமக்களின் அணுகல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, இந்தியாவில் ஏற்கனவே அனுப்பப்பட்ட செய்திகளை எடிட் செய்யும் வசதியை வரும் ஜூன் 30, 2026 வரை முடக்குமாறு டெலிகிராம் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஏமாற்றப்படுவது தடுப்பு

தேர்வு மோசடி கும்பல்கள் இந்த செய்தி எடிட் செய்யும் வசதியைப் பயன்படுத்தி, தேர்வு முடிந்த பிறகு பழைய செய்திகளின் நேரத்தையும் (Timestamp) உரையையும் மாற்றி, தேர்வு தொடங்குவதற்கு முன்பே வினாத்தாள் கசிந்தது போன்ற ஒரு போலித் தோற்றத்தை உருவாக்கி மாணவர்களை ஏமாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பாதுகாப்பு

இந்த தற்காலிகத் தடை, லட்சக்கணக்கான மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் தேர்வு எழுத பெரிதும் உதவும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

==================