சஞ்சார் சாத்தி செயலி
Sanchar Saathi Mobile App Launch By Central Govt : உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சந்தைகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 120 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இந்த நிலையில், சைபர் பாதுகாப்புக்காக மத்திய அரசு தனியாக சஞ்சார் சாத்தி செயலியை அறிமுகப்படுத்தியது.
புதிய போன்களில் கட்டாயம்
இவற்றை புதிய போன்களில் நிறுவிய பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இதனை முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 90 நாட்களுக்குள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சஞ்சார் சாத்தி செயலி ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஸ்மார்ட்போன்கள் மீட்பு
அன்றிலிருந்து இன்று வரை சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைந்து போன செல்போன்களை இந்த செயலி கண்டுபிடிக்க உதவியுள்ளது. அக்டோபரில் மட்டும் இந்த செயலி உதவியுடன் 50,000 ஸ்மார்ட்போன்கள் மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு சேவை
சஞ்சார் சாத்தி இந்திய தொலைத்தொடர்புத் துறையின் சிறப்பான ஒரு முயற்சியாகும். இது குடிமக்களுக்கு செல்போன் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்த ஒரு வெப் போர்ட்டல் மற்றும் செல்போன் செயலியை வழங்குகிறது. இது பயனர்கள் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட தொலைபேசிகள் குறித்து புகாரளிக்கவும், மோசடிகளை தடுக்கவும், அரசு தொடர்பான பிற குடிமக்கள் சேவைகளை அணுகவும் அனுமதிக்கிறது.
எதிர்க்கும் ஆப்பிள் நிறுவனம்
மத்திய அரசு பிறப்பித்துள்ள இந்த புதிய உத்தரவை சாம்சங், விவோ, ஓப்போ, ஷாவ்மி நிறுவனங்களுடன் சேர்ந்து ஆப்பிளும் பின்பற்ற வேண்டிய கட்டாயம்(Sanchar Saathi Mandatory in All Mobile Phones) ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் ஆப்பிள் நிறுவனம் மோதல் போக்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
======================